கோவையில் `மெய்யழகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார்.நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.
கோவையில்  `மெய்யழகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா
Published on

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.

அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார்.'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெறவுள்ளது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இதனால் இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com