என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான்.
- இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
திரைப்படம் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்தி மொழியில் தங்கலான் திரைப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சீயான் விக்ரமிற்கு இப்படம் மாபெரும் வெற்றியாகும். .
படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சீயான் விக்ரம் படத்தின் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து வைத்தார். அதில் அவரே பலருக்கும் பரிமாறிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் பரிமாறப்பட்ட உணவுகள் அனைத்தும் பிரபல சமையல் நியுணரான மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனத்தால் சமைக்கப்பட்டது ஆகும். பரிமாறப்பட்ட உணவு பட்டியல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்.
- இதில் பரத், அபிராமி, பவித்ரா லட்சுமி, தலைவாசல் விஜய், அஞ்சலி நாயர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ். இதில் பரத், அபிராமி, பவித்ரா லட்சுமி, தலைவாசல் விஜய், அஞ்சலி நாயர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
ஃபிரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் படத்தை தயாரித்துள்ளார். ஜோஸ் பிராங்க்ளின் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
சென்னையை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாகி இருப்பதால் படத்துக்கு ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் 26-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பரத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் காலத்தை நாம் தாண்டி விட்டோம். திறமை இருந்தால் வெற்றி பெறலாம். பேராசை என்பது எனக்கு எதிலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அபிராமி பேசியதாவது:-
படத்தில் நான் ஒரு திருநங்கைக்கு தாயாக நடித்துள்ளேன். ஒரு நடிகைக்கு ஒரு கதை வரும்போது எப்படியாவது இதை பண்ணிவிட வேண்டும் என்று தோன்றும். அப்படி பண்ணிய படம் தான் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் படம். துப்புரவு தொழிலாளியாகவும் நடித்து உள்ளேன், திருநங்கைக்கு தாயாகவும் நடித்து உள்ளேன். படத்தில் நடிப்பதற்கு முன்பு இயக்குனரிடம் நான் போட்ட கண்டிஷன் என்னவென்றால் படத்தின் கதைப்படி எனக்கு மகளாக நடிப்பவர் ஒரு திருநங்கையாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு இயக்குனரும் சம்மதித்தார்.
நமக்காக பணிபுரிவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் தான் நினைப்பார்கள் அப்படிதான் படத்தின் தயாரிப்பாளர் எம்.பி. ஆனந்த் பார்த்துக் கொண்டார். தயாரிப்பாளர் ஆனந்திடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். எப்போதும் இப்படியே இருங்கள். இந்த படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றதும் மாறி விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
- அனுமதியின்றி திரையரங்குகளில் 6 காட்சிகள் திரையிடுவரை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சென்னை:
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் கோட் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி, சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், திரையரங்குகளில் அனுமதியின்றி 6 காட்சிகள் திரையிடுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
- தெலுங்கில் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்சனைகள் உள்ளது.
- யாரும் பேசாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது. பூனைக்கு யாராவது மணிக்கட்டியே தீர வேண்டும்.
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தால் திரை உலகமே நிலை குலைந்து போய் உள்ளது. இந்த சம்பவத்தால் மலையாள திரை உலக அமைப்பான அம்மா அமைப்பு தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.
கேரளாவில் திடீரென வெடித்துள்ள இந்த சம்பவம் அங்கு மட்டுமின்றி அனைத்து திரை உலகிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. சில தினங்களாக ஒவ்வொரு நாளும் பல நடிகைகள் புதிய பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை ஷகிலா தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:-
மலையாள திரை உலகில் இருப்பது போன்று தமிழ் திரையுலகிலும் இந்த பிரச்சனை உள்ளது. குறிப்பாக தெலுங்கு திரை உலகில் இதைவிட அதிகமாகவே இருக்கிறது.
இந்தியை பொறுத்தவரை அப்படி அல்ல. அவர்கள் உடனே நண்பர்களாக மாறி விடுவார்கள். எனவே அங்கு பெரிதாக காஸ்டிங் கோச் பிரச்சனை இருக்காது. ஆனால் அங்கு நெபாடிசம் பிரச்சனை உள்ளது.
அதாவது புதிய நடிகர்கள் யாரையும் வளரவிடாமல் தங்களின் வாரிசுகளையே முன்னணி நடிகர்களாக்க முயற்சிப்பது போன்ற பிரச்சனை உள்ளது.
தெலுங்கில் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்சனைகள் உள்ளது. இவை எல்லாம் பேசி வைத்துக் கொண்டுதான் செய்யப்படுகிறது. ஆரம்பத்திலேயே தயாரிப்பாளருக்கும் தனக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் பேசி விடுவார்கள். இதற்கு சம்மதித்துதான் அந்த நடிகை படத்தில் நடிப்பார். முக்கால்வாசி படம் முடிந்த பின்னர் அவர்களால் தன்னை படத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதால் நடிகைகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். இதன் காரணமாக பல பிரச்சனைகள் வருகிறது.
குடும்ப சூழலால் பாலியல் தொல்லைகளை சிலர் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். யாரும் பேசாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது. பூனைக்கு யாராவது மணிக்கட்டியே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை.
- மலையாள திரையுலகத்தை பற்றி பேச எனக்கு விருப்ப மில்லை.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர்.
பாலியல் தொல்லைக்கு உள்ளான நடிகைகள்-பெண் கலைஞர்களுக்கு மலையாள மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரபல தமிழ் நடிகையான சாந்தி வில்லியம்சும் கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடத்துள்ளார். இதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். கேரளாவில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
மலையாள திரையுலகத்தை பற்றி பேச எனக்கு விருப்ப மில்லை. காரணம் இங்கு அரசியல் அதிகம். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை. இங்குள்ளவர்கள் 60, 70 மற்றம் 90 வயதுடைய பெண்களின் அறைகளுக்கு கூட இரவில் வந்து கதவை தட்டுகிறார்கள்.
இது எனக்கு பிடிக்காத விஷயம். நான் சில காலமாக படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் திரையுலகத்தில் அப்படி இல்லை. அவர்கள் ஒருபோதும் எங்களின் கதவுகளை தட்டவில்லை. எங்களிடம் தவறாகவும் நடந்து கொண்டதில்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெண்களே உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள்.
- பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவனந்தபுரம்:
நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து ஏராளமான நடிகைகள் மற்றும் சினிமா பெண் கலைஞர்கள் மலையாள திரையுலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். அவர்கள் பிரபல நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஹேமா கமிஷனின் அறிக்கை மற்றும் நடிகைகளின் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக கூறிவரும் நடிகை களுக்கு ஏராளமான நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர்.
நடிகைகள் தொடர்ச்சியாக பலர் மீது பாலியல் புகார் தெரிவித்து வரும் நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இதற்கு "தங்கலான்" பட நடிகை பார்வதி திருவோத்து கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது கோழைத்தனமான செயல் என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
மலையாள திரைப்பட சங்கத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா என்ற செய்தியை கேட்டவுடன் நான் முதலில் இது எவ்வளவு கோழைத்தனம் என்று தான் நினைத்தேன்.
குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருந்து அவர்கள் எவ்வளவு கோழைத்தனமாக விலக்கிச் செல்கிறார்கள்.
அவர்களின் இந்த செயலால் மீண்டும் நம் மீது பொறுப்பு விழுகிறது. பெண்களே உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள்.
பெண்கள் புகார் அளித்தால் அதன்பேரில் வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியே கொண்டு வர வேண்டும்.
ஆனால் இந்த விவகாரத்தில் அரசு கவனக்குறைவாக இருந்தது. பெண்களால் ஏற்படாத பிரச்சனைகளுக்கான பொறுப்பு எப்போதும் பெண்களின் மீதே சுமத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சல்மான் கான் விலா எழும்பு காயம் காரணமாக அவதிப்படுவதாக தகவல்.
- வீடியோவை பார்த்து எனக்கு பிடித்தமான ரசிகரை வயதானவராக பார்க்கும்போது கவலை அளிக்கிறது ரசிகர் கருத்து.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழந்து வருபவர் சல்மான் கான். இளம் வயதில் உச்ச நட்சத்திரமாக விளங்கினார். தற்போது அவருக்கு 58 வயது ஆனாலும் துடிப்புடன் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது ஷோபாவில் அமர்ந்திருந்தார். பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே வந்தபோது, அவரிடம் பேசுவதற்காக சல்மான் எழுந்து நிற்க முயற்சி செய்வார். அப்போது அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. மெதுவாக உடல்நலம் குன்றிய நபர் எழுந்து நிற்பதுபோல் எழுந்து நிற்பார். பின்னர் சோனாலி பிந்த்ராவை தழுவி வாழ்த்து தெரிவிப்பார். இதுபோன்று மற்றொரு வீடியோவிலும் எழுந்து நிற்க கஷ்டப்படுவார்.
இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சல்மான் கான் மெதுவாக எழுந்து நிற்பதை கண்ட ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய சிறுவயது பிடித்தமான நடிகர் தற்போது வயதாகிவிட்டார். நாமும் அப்படித்தான் என ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
லெஜெண்ட் வயதாகிவிட்டார் என மற்றொரு ரசிகர் கருத்து பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் "எனக்கு பிடித்தமான ரசிகரை வயதானவராக பார்க்கும்போது கவலை அளிக்கிறது" எனத் தெரிவித்தள்ளார்.
சல்மான் கானின் முதல் படமான மைன் பியார் கியா (Maine Pyaar Kiya) கடந்த 23-ந்தேதி ரீ-ரிலீஸ் அனது. வரிசையாக இரண்டு மூன்று படங்களில் நடிக்க இருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிகந்தர் உள்ளிட்ட படங்களில் நடத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
இதற்கிடையே சல்மான் கான் விலா ஏலும்பு (Rib Injury) காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறது. அதில் இருந்து அவர் விரைவில் குணம் அடைந்து வர வேண்டும் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
- சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
- தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும்.
சென்னை:
ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சினிமாவில் நடிக்க வரும் பெண்கள், மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும். தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதை போன்று தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டலை அறிய கமிட்டி அமைக்கப்படும்.
தமிழ் சினிமாவில் 10 பேர் கொண்ட குழுவுடன் ஒரு கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெறுகிறது. தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டல் நடக்கிறதா இல்லையா என்று என்னால் செல்ல முடியாது.
சினிமாவில் நடிக்க வரும் பெண்களில் 20% பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. 80% பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுவோரை, செருப்பால் அடிக்க வேண்டும். எந்த பிரபலமாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
- எல்லாருக்கும் பிடிக்கும் வகையிலும் புரியும் வகையிலும் இந்த படம் இருக்கும்.
- இந்த காட்சிக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை உங்களால் சொல்ல முடியாது. இதை சவாலாக சொல்கிறேன்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `கோட்' (Greatest of all time) திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படம் மங்காத்தாவை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது என்ன கதைகலம் என்பதை டிரெய்லரில் கூறிவிட்டேன். ஆனா அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. எல்லாருக்கும் பிடிக்கும் வகையிலும் புரியும் வகையிலும் இந்த படம் இருக்கும். படத்தை எந்த இடத்திலேயும் யாரையும் குழப்பும் அளவுக்கு எடுக்கவில்லை. ஆனால் இந்த காட்சிக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை உங்களால் சொல்ல முடியாது. இதை சவாலாக சொல்கிறேன். இதை நோக்கி தான் கைத செல்கிறது என ரசிகர்களால் கூற முடியாது. அந்த மாதிரியான ஒரு ஸ்கீரின்பிளே.
இந்த படம் மங்காத்தாவை மிஞ்சும் அளவுக்கு இருக்கும். மங்காத்தா படம் உணர்ச்சிபூரவமான படமாக இல்லாமால் முழுவதும் பாய்ஸ் சம்பத்தப்பட்ட படமாகவும் துரோகத்தை காட்டும் படமாகவும் இருக்கும். ஆனால் இந்த படம் அப்படி இல்லாமல் முழுவதும் குடும்ப படமாக இருக்கும். காந்தி என்ற ஒரு தனிநபர் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை. இந்த படத்தில் என்ன நடக்குது என்று தோன்றாமல் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்கும்.
இவ்வாறு வெங்கட் பிரபு கூறினார்.
- நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
- பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத் தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
அதில் மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
அவர்கள் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினர்.
அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது.

அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்பு விசாரணை குழு ஈடுபட்டு வருகிறது.

பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்கள் மேல் மேலும் பல நடிகைகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை நேற்று 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் அமைப்புகளை சேர்ந்த 100 பெண்கள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.
முகேஷை தவிர நடிகையின் புகாரின் பேரில் நடிகர் மணியன்பிள்ளை ராஜூ, முன்னாள் பொதுச் செயலாளர் ஏவலபாபு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பங்குகளில் முதலீடு செய்வதற்கு பலரும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- அமிதாப் பச்சன் நீண்ட காலமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்,
இந்தியாவில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்றவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதற்கு பலரும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் குடும்ப அலுவலகம் ஸ்விக்கியில் சிறிய பங்குகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமிதாப் பச்சன் நீண்ட காலமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார், அதிலும் குறிப்பாக டிஜிட்டல் டெக் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல துறை நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகம். அமிதாப் பச்சன் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சினிமாவை காட்டிலும் ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு முதலீட்டு வாயிலாகவே அதிகளவில் சம்பாதிக்கிறார்.
- பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த நத்தோலி ஒரு சிறிய மீனல்ல படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கினார்.
- கதாசிரியை ஒருவர் பிரபல மலையாள டைரக்டர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.
ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கதாசிரியை ஒருவர் பிரபல மலையாள டைரக்டர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.
பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த நத்தோலி ஒரு சிறிய மீனல்ல படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கி கவனிக்கப்பட்டார். நித்யாமேனன் நடித்த பாப்பின்ஸ், பிரணா ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.
பெண் கதாசிரியர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்த புகார் மனுவில், "என்னிடம் கதை இருக்கிறது என்று வி.கே.பிரகாசுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். நேரில் வரும்படி ஓட்டலுக்கு அழைத்தார். ஓட்டலில் நள்ளிரவு எனது அறைக்குள் நுழைந்து கதையை சொல்லும்படி கேட்டார்.
அப்போது எனக்கு கொஞ்சம் மதுவும் வழங்கினார். பிறகு தோளை இறுக்கமாக பிடித்து என் கன்னத்தில் முத்தமிட முயன்றார். அவரது விருப்பத்துக்கு நான் உடன்படவில்லை என்று தெரிந்ததும் அறையை விட்டு வெளியேறி விட்டார்.
மறுநாள் உதவி இயக்குனர் மூலம் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து அனுப்பி விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்'' என்று கூறியுள்ளார்.






