என் மலர்
சினிமா செய்திகள்

மங்காத்தாவை மிஞ்சுமா GOAT - வெங்கட் பிரபு பளீச்
- எல்லாருக்கும் பிடிக்கும் வகையிலும் புரியும் வகையிலும் இந்த படம் இருக்கும்.
- இந்த காட்சிக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை உங்களால் சொல்ல முடியாது. இதை சவாலாக சொல்கிறேன்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `கோட்' (Greatest of all time) திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படம் மங்காத்தாவை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது என்ன கதைகலம் என்பதை டிரெய்லரில் கூறிவிட்டேன். ஆனா அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. எல்லாருக்கும் பிடிக்கும் வகையிலும் புரியும் வகையிலும் இந்த படம் இருக்கும். படத்தை எந்த இடத்திலேயும் யாரையும் குழப்பும் அளவுக்கு எடுக்கவில்லை. ஆனால் இந்த காட்சிக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை உங்களால் சொல்ல முடியாது. இதை சவாலாக சொல்கிறேன். இதை நோக்கி தான் கைத செல்கிறது என ரசிகர்களால் கூற முடியாது. அந்த மாதிரியான ஒரு ஸ்கீரின்பிளே.
இந்த படம் மங்காத்தாவை மிஞ்சும் அளவுக்கு இருக்கும். மங்காத்தா படம் உணர்ச்சிபூரவமான படமாக இல்லாமால் முழுவதும் பாய்ஸ் சம்பத்தப்பட்ட படமாகவும் துரோகத்தை காட்டும் படமாகவும் இருக்கும். ஆனால் இந்த படம் அப்படி இல்லாமல் முழுவதும் குடும்ப படமாக இருக்கும். காந்தி என்ற ஒரு தனிநபர் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை. இந்த படத்தில் என்ன நடக்குது என்று தோன்றாமல் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்கும்.
இவ்வாறு வெங்கட் பிரபு கூறினார்.






