தங்கலானின் தடபுடல் விருந்து

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான்.இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
தங்கலானின் தடபுடல் விருந்து
Published on

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

திரைப்படம் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்தி மொழியில் தங்கலான் திரைப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சீயான் விக்ரமிற்கு இப்படம் மாபெரும் வெற்றியாகும். . 

படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சீயான் விக்ரம் படத்தின் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து வைத்தார். அதில் அவரே பலருக்கும் பரிமாறிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் பரிமாறப்பட்ட உணவுகள் அனைத்தும் பிரபல சமையல் நியுணரான மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனத்தால் சமைக்கப்பட்டது ஆகும். பரிமாறப்பட்ட உணவு பட்டியல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com