என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வாழை படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.
    • சோ தர்மன் எழுதிய வாழையடி சிறுகதையை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன்.

    என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய"வாழையடி......" என்கிற சிறுகதை.

    என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.

    வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.

    ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி"என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.

    கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு.

    "வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும்."

    என்னை வாழை வாழ வைக்கவில்லை" என்று பதவியிட்டுள்ளார்.

    1999ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற லாரி விபத்தை மையமாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சோ தர்மன் எழுதிய வாழையடி சிறுகதையை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டது.
    • மஞ்சுமெல்லா பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர் நடிக்கிறார்.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

    கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூலி படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வரும் நிலையில், யார் யார் இப்படத்தில் நடித்துள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கூலி படத்தில் கன்னட நடிகை ரச்சிதா ராம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

    ரச்சிதா ராம் படங்கள் கன்னட படங்கள் மட்டுமின்றி ஏராளமான சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நந்தினி சீரியல் ஹீரோயின் நித்யா ராமின் தங்கை தான் ரச்சிதா ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வமாக காட்டுபவர்.
    • அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர். அஜித்குமார் அதிவேகமாக கார் ஓட்டும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வைரலாகும்.

    அவ்வகையில், அஜித் குமார் அவரது ஆடி காரில் 234 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
    • வேதாளம் படிப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை யோகிபாபு பகிர்ந்துள்ளார்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் தங்கையாக லட்சுமி மேனனும் நடித்திருந்தனர்.

    இத்திரைப்படம் தெலுங்கில் கூட சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், வேதாளம் படிப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை நடிகர் யோகிபாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபுவை நடிகர் அஜித்குமார் புகைப்படம் எடுக்கும் போட்டோ தான் அது. இந்த புகைப்படம் தான் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நந்தன் திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.

    உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

    2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இப்படம் படப்பிடிப்பு முடிந்தும் வெளியாகாமல் இருந்து வந்தது. அண்மையில் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளியான கருடன் படம் வெற்றி அடைந்ததை அடுத்து, நந்தன் படமும் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.
    • முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, மஞ்சுமெல்லா பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    கூலி படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வரும் நிலையில், யார் யார் இப்படத்தில் நடித்துள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் வெளியாவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

    மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி ஆடியோ உரிமை பெற்று உள்ளது.

    படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகிய நிலையில், திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

    அதன்படி, லப்பர் பந்து திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    மேலும், லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாள சினிமா நடிகைகள் பலர் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டு சுமத்தியுள்ளனர்.
    • பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.

    மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

    இதுவரை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மலையாள சினிமாவில் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இயக்குநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் நடிகர் நவஜீத் நாராயணன் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக பேசிய அவர், "எனக்கு நன்றாக தெரிந்த இயக்குநர் ஒருவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று என்னிடம் கேட்டார். பிறகு என்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் அவர் முகத்தில் அறைந்து விட்டு கிளம்பி விட்டேன்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி ஹேமா அறிக்கை பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்தியது.
    • அதனைத் தொடர்ந்து நடிகைகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

    மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

    இப்படி பல நடிகைகள், சினமாத்துறையைச் சேர்ந்தவர்கள் புகார் கூற ஆரம்பித்ததால் மலையாள சினிமா துறை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பொது வெளியில் புகார் கூறியபோதிலும், காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை.

    இதனால் MeToo-வை எதிர்கொள்ள கேரள மாநில அரசால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது சோனியா மலிஹார் என்ற நடிகை 2013-ம் ஆண்டு சினிமா செட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எனது புகார் தொடர்பாக மீடியாக்கள் நடிகர் ஜெயசூர்யாவை தொடர்பு படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    பாலியல் துன்புறுத்தல் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது. இந்த 17 புகார் தொடர்பாக பலர் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாத்துறையை சேர்ந்தவர்களிம் போலீசார் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

    முன்னதாக நடிகை மினு முனீர் நடிகர்கள் எம். முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ, எடவேலா பாபு ஆகியோர் மீது துன்புறுத்தல் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் வந்த மிரட்டல் மெசேஜ்-யை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார்.

     நடிகை மினு முனீர் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா மற்றும் மணியன்பிள்ளை ராஜூ, பாபு ஆகியோர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    நான் படப்பிடிப்பு தளத்தில் கழிவறைக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து வெளியேறியபோது, எனக்கு பின்னால் இருந்து ஜெயசூர்யா என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்ததால் நான் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து சென்று விட்டேன்.

    நடிகர் சங்க முன்னாள் செயலாளர் செயலாளர் பாபு, அம்மா உறுப்பினர் அட்டை பெறுவதற்கு உதவி செய்வதாகக் கூறி அவர் வசிக்கும் வீட்டிற்கு அழைத்தார். அப்போது உடல் தொடர்பான துன்புறுத்தலுக்கு ஆளானேன்.

    நடிகரும், சிபிஎம் (CPM) எம்.எல்.ஏ.-வுமான நடிகர் முகேஷ், அவருடைய ஆசைக்கு இணைங்க மறுத்ததால் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வழங்க மறுத்துவிட்டார்" எனக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்திக் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது.
    • ரேவதி சம்மத் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.

    மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது முதல், பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

    பின்னர் முதன்முறையாக பெயர் குறிப்பிட்டு மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா பாலியல் தொல்லை புகார் கூறினார். மலையாள சினிமாவில் நடிக்க வந்த தன்னை பாலியல் ரீதியாக அணுகினார் என்று சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித்-மீது புகார் கூறியிருந்தார்.

    இந்த புகாரை அடுத்து சினிமா அகாடமி தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் ராஜினாமா செய்தார்.

    அதன் பிறகு மேலும் ஒரு மலையாள நடிகை, நடிகர் சித்திக் ஹோட்டலில் வைத்து அத்துமீறியதாக புகார் கூறினார். இதைத்தொடர்ந்து நடிகர் சித்திக் மலையாள சினிமா அசோசியேசன் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஹேமா கமிஷன் அறிக்கையைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், ராஜினாமாக்களும், விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.

    சில தினங்களுக்கு முன்பு நடிகர் சித்திக் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது என்று ரேவதி சம்பத் கூறி இருந்தார். அதில் சித்திக் ரேவதி சம்மத்திடம் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப்பில் பேசியதாகவும் படம் குறித்து பேசுவதற்கு ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நடிகை ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் பேரில் கேரள போலீசார் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார் தனுஷ்
    • இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ' என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

    நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

    இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து இருந்தனர்.

    இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ' என்ற தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்பாடலைக் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இப்பாடலிற்கு தனுஷின் மூத்த மகனான யாத்ரா தனுஷ் இப்பாடலிற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார் என எஸ் ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார். இதைத்தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் அனைவரும் யாத்ரா தனுஷ் பாடலசாரியரானார் என செய்திகள் வலம் வந்தன.

    ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனுஷ் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார் என புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இப்பாடல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் சூழ்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் நடந்த நேர்காணலில் எஸ்.ஜே சூர்யா சுவாரசியமான தகவலை கூறினார். அதில் அவர் தான் குஷி 2 படத்தின் கதையை பவன் கல்யாண் சாரிடம் கூறினேன், அவருக்கு கதை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் இப்பொழுது காதல் கதை செய்ய விருப்பமில்லை என கூறினார். அந்த கதையை எனக்கு எடுக்க ஆசை இருக்கிறது. அதற்கு நானி, விஜய் சார் , ராம் சரண் என அனைவரும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பர் என கூறினார். மேலும் அந்த படத்திற்கு கதாநாயகி கதாப்பாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் சரியாக இருப்பார் என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×