என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்தில் நடித்துள்ளார்.
    • இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கருடன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சசிகுமார் அடுத்ததாக 'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாகியது.

    இப்படம் மிகவும் உண்மை கதையில் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என கூறப்படுகிறது. சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பெரும்பாலும் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் படத்தை குறித்து மிகப்பெரிய அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு தேதியாக் இருக்கும் என பலரால் எதிர்ப் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.
    • இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்

    நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

    இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து இருந்தனர்.

    இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ' என்ற தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்பாடலைக் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இப்பாடலிற்கு தனுஷின் மூத்த மகனான யாத்ரா தனுஷ் இப்பாடலிற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

    இதுவே இவர் எழுதும் முதல் பாடலாகும். சமூக வலைத்தளங்களில் குட்டி பொயட் இஸ் லோடிங் என பதிவிட்டு வருகின்றனர்.

    இப்பாடல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் இப்பாடலின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார்.
    • அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தில் அமிதாப்பச்சன், பகத்பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற அக்டோபர் 10-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

    இதுக் குறித்து படக்குழு தற்பொழுது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்தின் கதாப்பாத்திரத்தின் அறிவிப்பு நாளை மாலை 6 மணி முதல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் யார் யார் இப்படத்தில் நடித்து இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் ஒரு பக்கா ஆக்ஷன் கமெர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    தணிக்கை குழு கோட் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கினர். படத்தின் நேர அளவு முதலில் 3 மணி நேரமாக இருந்தது. இப்பொழுது படத்தின் நேர அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. படத்தின் நேரம் தற்பொழுது 3 மணிநேரம் 3 நிமிடங்கள் 14 நொடிகளாக  மாறியுள்ளது.

    படத்தின் இறுதியில் படக்குழுவினர் ப்லூபர்ஸ் வீடியோ அல்லது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடக்க காட்சிகளாக இருக்கும் என நெட்டிசன்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த வெப் தொடருக்கு `தீவினை போற்று’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

    மேலும் இவர் தெலுங்கிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கொத்தா திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான பொன் ஒன்று கண்டேன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

    அடுத்ததாக இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அதே சமயம் ஐஸ்வர்யா லட்சுமி புதிய வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் மோசு என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றியாவார்.

    இந்த வெப் தொடருக்கு `தீவினை போற்று' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு 40 நாட்களாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. தற்பொழுது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் பொள்ளாச்சியில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடர் 1990-களில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.  இதனை யாழி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்தொடரில் ஐஷ்வர்யா லட்சுமியுடன் இணைந்து சத்யராஜ், பாரதிராஜா மற்றும் பாபு ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    'தீவினை போற்று' வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

    இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகயுள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் காட்சியளிக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியாகவுள்ளனர் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2.5 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்பொழுது மோகன்லால் அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
    • நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடித்தத்தை சமர்பித்துள்ளனர்.

    கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    மலையாள திரைப்படம் நடிகர்கள் சங்கத்தின் ப்ரெசிடண்ட் பொறுப்பில் இருப்பவர் நடிகர் மோகன்லால். அவர் தற்பொழுது அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

    இவர் மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடித்தத்தை சமர்பித்துள்ளனர். இதுக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் " சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதற்கு காரணம் சங்கத்து உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. இது கடந்த சில நாட்களுக்காக அனைத்து பத்திரக்கை ஊடங்களில் பேசும் பொருளாக இருக்கிறது. இதனால் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தார்மீக அடிப்படையில் செயற்குழுவை கலைக்க தீர்மானம் செய்துள்ளோம். புது செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் மறு தேர்தல் வைத்து இன்னும் 2 மாதங்களில் உருவாக்கப்படும்" என தெரிவித்துள்ளனர். மேலும் புது செயற்குழு மற்றும் தலைமை பொறுப்பு விரைவில் இந்த சங்கத்தை மீண்டும் புதிய பலத்துடனும், உத்வேகத்துடனும் மீட்டெடுக்கும். அனைவருக்கும் நன்றி எங்கள் மேல் உள்ள பிழையை சுட்டி காட்டியதற்கு என தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராயன் படம் இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
    • ராயன் படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

    தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களை விட ராயன் அதிக வசூல் செய்துள்ளது. இந்த படம் வெளியான ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் ராயன் முதல் இடத்தில் உள்ளது. ராயன் படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ராயன் படத்தை பாராட்டி கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அருமை தனுஷ். நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பது எப்போதும் தெரியும், ஆனால் நீங்கள் ஒரு சிறந்த இயக்குநரும் கூட. இன்னும் நிறைய படங்கள் இயக்க வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவெ வெளிவந்தது.
    • சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.

    கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை புறநானூறு படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் உலா வருகிறது.

    இப்படத்தின் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவெ வெளிவந்தது. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையை தவறாக வழி நடத்துகிறீர்கள்.
    • நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

    2017-ம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் கேரள மாநில அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு சமர்பித்த அறிக்கை மலையாளம் சினிமா துறையில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை வெளிப்படுத்தியது.

    அதனைத் தொடர்ந்து பெரும்பாலான நடிகைகள் தாங்களும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக நடிகர்கள், டைரக்டர்களுக்கு எதிராக அடுத்தடுத்து புகார் தெரிவித்து வரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாலையான சீனிமாவின் மூத்த நடிகரும், மத்திய தலைவருமான சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

    நான் புரிந்து கொண்டது வகையில் இது எல்லாம் உங்களுக்கான தீனி மாதிரி. இதை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த பிரச்சனைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன.

    நீங்கள் (ஊடகங்கள்) உங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழி நடத்துகிறீர்கள்.

    புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

    இவ்வாறு சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

    • எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
    • குற்றச்சாட்டுகளை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள தொடங்கி உள்ளனர்.

    கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    இதுபற்றி டபிள்யூ சி.சி.அமைப்பின் நிறுவன உறுப்பினரும் நடிகையுமான ரேவதி கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் இப்போது தீவிரமாக எடுத்துக் கொள்ள தொடங்கி உள்ளனர்.

    திரை உலகை சேர்ந்த சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இந்த பிரச்சனைக்கு கருத்து எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் எங்களைப் போலவே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாங்கள் பேசுகிறோம். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • பிஜிலி ரமேஷ் தமிழ் திரையுலகிற்கு சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமானவர்.
    • 2019-ம் ஆண்டு நட்பே துணை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

    பிஜிலி ரமேஷ் தமிழ் திரையுலகிற்கு சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமானவர். இவர் பிளாக் ஷீப் என்னும் யு டூப் சேனல் நடத்திய நகைச்சுவை தொடரில் பங்குபெற்று தனது நகைச்சுவை வசனத்தில் பலரால் ஈர்க்கப்பட்டு பிரபலமானவர்.

    பின்னர் தமிழ் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இவர் 2019-ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடித்த 'நட்பே துணை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார். 

    இதனை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள், அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்திருப்பார்.

    இந்நிலையில் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்தால் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையில் இருந்த அவர் இன்று அதிகாலை காலமானார்.

    ×