என் மலர்
சினிமா செய்திகள்
- விபத்தில் சிக்கியது தொடர்பாக ரவி தேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- விபத்தில் சிக்கிய பிறகும், ரவி தேஜா தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ரவி தேஜா தனது 75 ஆவது படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தின் போது ரவி தேஜாவின் தசைப்பகுதி கிழிந்துள்ளது. இதற்காக அவர் ஆறு வார காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
விபத்தில் சிக்கியது தொடர்பாக ரவி தேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். தற்போது நலமாக உணர்கிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்துகள் மற்றும் ஆதரவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய பிறகும், ரவி தேஜா தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது காயம் மேலும் அதிகரித்துள்ளது. ரவி தேஜா விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் விரைவில் நலம்பெற ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார் தனுஷ்.
- இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேர்ரோ’ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து இருந்தனர்.
இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ' என்ற தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்பாடலைக் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இப்பாடல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுக்குறித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் படத்தில் நடித்த முக்கிய கதாப்பாத்திரமான 7 நயர்களும் இருக்கிறனர்.
இதனால் இப்பாடலின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்ன்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
- தமிழிலும் மலையாளத்திலும் பிரபல நடிகராக இருப்பவர் ரியாஸ் கான்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர்.
நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டினார். நடிகர் ரியாஸ் கான் தன்னை செல்போன் வழியாக தொடர்புகொண்டு, 'என் ஆசைக்கு இணங்கக்கூடிய உன் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவை' எனக் கூறியதாக நடிகை ரேவதி சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழிலும் மலையாளத்திலும் பிரபல நடிகராக இருப்பவர் ரியாஸ் கான். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'தன்மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை யாரென்று கூட தெரியாது. நான் அவரை பார்த்தது இல்லை. எனக்கு மலையாளம் எழுத படிக்க தெரியாது. அந்த நடிகை நான் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்யட்டும். ' என்று நடிகர் ரியாஸ் கான் விளக்கம் அளித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). திரைப்படம்
- படத்தின் ஸ்பெஷல் சாங் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). திரைப்படம் வரும் செப் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.படக்குழு முடிந்த அளவுக்கு தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். படத்தின் ஸ்பெஷல் சாங் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
படக்குழு மலேசியாவில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் வெங்கட் பிரபு நடிகர் அஜித்தை சமீபத்தில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். அண்மையில் விடா முயற்சி படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. அப்பொழுது வெங்கட் பிரபு , நடிகர் அஜித் குமாரை சந்தித்தார். "அங்கு நாங்கள் நிறைய விஷயத்தைப் பற்று பேசினோம். பல ப்ராஜக்டுகளை பற்றி கலந்துரையாடினோம். விஜய் மற்றும் அஜித்தை ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டிய ஆசை எனக்கு இருக்கிறது என அவர்கள் இருவருக்கும் தெரியும். மங்காத்தா 2 திரைப்படத்தை நடிகர் அஜித்தை வைத்து தான் எடுக்க வேண்டும், இல்லையென்றான் அவரது ரசிகர்கள் என்னை அடித்து விடுவார்கள். பல விஷயங்களை பற்றி பேசினோம். அது எப்படி நடக்கும், எப்போ நடக்கும் என தெரியாது " என நகைச்சுவையாக பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'விஜய் டிவி' புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் 'Four சிக்னல்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
- மகேஸ்வரன்கேசவன், காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படமாக 'Four சிக்னல்' படத்தை உருவாக்கி உள்ளார்.
ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் 'விஜய் டிவி' புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் 'Four சிக்னல்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
அறிமுக இயக்குநரான மகேஸ்வரன்கேசவன், காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படமாக 'Four சிக்னல்' படத்தை உருவாக்கி உள்ளார். நகரங்களில் வசிக்கும் வெகு ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை சுழல்கிறது.
சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள 'Four சிக்னல்' திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.
அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க, A.J அலி மிர்சாக் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளையும் யதார்த்தங்களையும் உள்ளடக்கிய ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள 'Four சிக்னல்' திரைப்படத்திற்கு பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்ய, பிரியன் எடிட்டிங் செய்துள்ளார்.
படம் குறித்து பேசிய இயக்குநர், "எளிய மக்களின் வாழ்க்கையில் நடக்கும் தினசரி நிகழ்வுகளின் சுவாரஸ்ய தொகுப்பாக 'Four சிக்னல்' இருக்கும். தரமான திரைப்படங்களை எப்போதும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்," என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.
- இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி ஆடியோ உரிமை பெற்று உள்ளது. படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகிய நிலையில். தற்பொழுது படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேது வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கினார் மேகா ஆகாஷ்
- கடந்த 22-ந் தேதி சாய் விஷ்ணு என்பவருடன் மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.
2017 ஆம் ஆண்டு `லை' என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகினார் நடிகை மேகா ஆகாஷ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனதில் பதிந்தார். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.
கடந்த 22-ந் தேதி சாய் விஷ்ணு என்பவருடன் மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மேகா பகிர்ந்து தனது ஆசை நிறைவேறியதாக இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவை பகிர்ந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேகா ஆகாஷை திருமணம் செய்யும் சாய் விஷ்ணு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மேகா ஆகாஷ் சென்னையில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்றார். குடும்பத்தினருடனும், வருங்கால கணவருடனும் சென்ற மேகா ஆகாஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.
அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
- அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சரத் குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சண்முக பாண்டியன் கடைசியாக மதுர வீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக படை தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையக்கவுள்ளார். பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார்.
இப்படத்தை ஸ்டர் சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவே.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நடிகை ரேவதி சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
- நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடிதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.
மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்.
கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நடிகை ரேவதி சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
இதைதொடர்ந்து, நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடிதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார். நடிகர் ரியாஸ் கான், செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும், தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேலும் ஒரு மலையாள நடிகை பிரபல நடிகர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ், இடைவேளை பாபு, ஜெயசூர்யா, மணியன் ஆகிய 4 பேர் மீது மலையாள நடிகை மினு முனீர் என்பவர் பாலியல் புகார் தெரவித்துள்ளார்.
தொடர் பாலியல் புகார்களை அடுத்து, கேரள அரசு சார்பில் ஐ.ஜி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், நடிகைகளிடம் இருந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
- "வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கிறது படை தலைவன்.
- முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படம் அமைந்து இருக்கிறது.
மறைந்த விஜய்காந்தின் மகனாவார் சண்முக பாண்டியன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
"வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு படை தலைவன் என தலைப்பிடப்பட்டுள்ளது.
டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்தாண்டு பூஜையுடன் தொடங்கியது. தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியீட்டு தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் 'சேவகர்'
- இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது.
முழுக்க முழுக்க ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் 'சேவகர்' இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது.
'சேவகர்' படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் ,மனோ,ஜமீன்குமார்,ஷர்புதீன்,சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர்.
இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன் .,சவுண்ட் இன்ஜினியர் கதிர்.தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு.
சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ்,தயாரித்துள்ளார். அவருடன் சுனில் குமார் பி ஜி ,இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் இணைந்துள்ளனர்.
நாட்டில் எங்கு அநியாயம் அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக் கேட்கும் ஒருவராக கதாநாயகன் பிரஜின். அவருக்கு உடன் நின்று கைகொடுக்க நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அங்கே அனைத்து அட்டூழியங்களும் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன் இருக்கிறார். அவருக்குத் துணை போகும் காவல் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். உற்று நோக்கிய போது அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த அநியாயத்தின் பின்னணியில் ஓர் இணைப்புப் பின்னல் இருப்பது புரிகிறது.இதைக் கண்டு கதாநாயகன் பிரஜின் குமுறுகிறார்.
தன் இயல்புப்படி அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் பிரஜின், ஒரு மக்கள் சேவகனாக இருக்கும் தனது நீதியின் பாதையில் குறுக்கிடும் தீயசக்திகளை அழிக்க நினைக்கிறார்.அப்போது போலீசையும் எதிர்த்துத் தாக்க வேண்டிய சூழல் வருகிறது. இதனால் அவருக்குப் பல வகையில் தொல்லைகள். அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அப்படிப்பட்ட அவருக்குக் காவல்துறையில் இதயம் உள்ள ஒருவரின் புரிதல் கிடைக்கிறது . அப்படி வரும் ஒரு காவல் அதிகாரி தான் போஸ் வெங்கட். அதன் பிறகு கதையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதைச் சொல்லும் படம் தான் இந்த சேவகர்.
இப்படத்தைத் தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரித்துள்ளார் .இவர் அமெரிக்காவில் இருக்கிறார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் சில காலம் வாழ்ந்தவர். திரைப்படங்கள் மீது அவருக்கு அளவு கடந்த ஆர்வம் உண்டு. பால்ய வயதிலேயே ஏராளமான திரைப்படங்களை ரசித்துப் பார்த்ததுண்டு. திரைப்படங்களுக்கான சுவரொட்டிகளைக்கூட ரசித்து ரசித்துப் பார்த்தவர். தானும் ஒருநாள் படம் தயாரித்து தனது பெயரும் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். தனது உலகியல் தேவைகளுக்காகப் பொருளீட்டுவதற்காக அமெரிக்கா சென்றார்.தனது நண்பர் சந்தோஷ் கோபிநாத் படம் இயக்க இறங்கிய போது அவருக்குக் கை கொடுத்து உதவ முடிவெடுத்து, தயாரிப்பாளராகியுள்ளார்.அதன் வழியே தனது பால்ய காலத்துக் கனவையும் மீட்டு நிறைவேற்றிக் கொண்டுள்ளார் எனலாம்.அப்படித்தான் உருவானது 'சேவகர்' திரைப்படம்.இந்தப் படத்தில் பிரசன்னா பாடியுள்ள வா வா தமிழா, பாடல், மற்றும் இரண்டு பாடல்கள் படம் வெளியான பின் பேசப்படும்.

இப்படத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட படக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களும் கேரளத்தில் இருந்து வந்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்,முழுக்க முழுக்க தென்காசி சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழில் புதிய முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு இந்தப் பட முயற்சியில் இறங்கி வெற்றிகரமாக
'சேவகர்' படத்தை முடித்துள்ளது இப் படக்குழு.படத்திற்கான மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன விரைவில்'சேவகர்' வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோட் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோட் திரைப்படம் 3 மணிநேரம் ஓடும்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `கோட்' (Greatest of all time) திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது.

இந்நிலையில், படம் ஓடும் நேரம் குறித்து நடிகர் பிரசாந்த், `கோட் படம் 179 நிமிடங்கள் ஓடும் முழு நீளப்படம். கிட்டத்தட்ட மூன்று மணிநேர படம். இந்த திரைப்படத்தில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளது. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம் உள்ளது. இது முழு நீளப்படமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படாத வகையில் இருக்கும்' என்று கூறியுள்ளார்.
மேலும் கோட் திரைப்படம் கர்நாடகா மற்றும் கேரளாவில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 7 மணிக்கு வெளியாகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/






