சண்முக பாண்டியனின் `படை தலைவன்' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்

"வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கிறது படை தலைவன்.முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படம் அமைந்து இருக்கிறது.
சண்முக பாண்டியனின் `படை தலைவன்' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

மறைந்த விஜய்காந்தின் மகனாவார் சண்முக பாண்டியன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.

"வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு படை தலைவன் என தலைப்பிடப்பட்டுள்ளது.

டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்தாண்டு பூஜையுடன் தொடங்கியது. தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியீட்டு தெரிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com