NEEK படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

`நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார் தனுஷ்.இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேர்ரோ’ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.
NEEK படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து இருந்தனர்.

இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ' என்ற தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்பாடலைக் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இப்பாடல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுக்குறித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் படத்தில் நடித்த முக்கிய கதாப்பாத்திரமான 7 நயர்களும் இருக்கிறனர்.

இதனால் இப்பாடலின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்ன்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com