என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஸ்தூரி ராஜா"

    • சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

    படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

    படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் தனுஷ் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நீங்கள் எனக்காக செய்த தியாகங்களுக்கு நன்றி என்ற வார்த்தை பத்தாது. நான் இன்று இருப்பதற்கு காரணம் நீங்கள் தான். மை அப்பா மை ஹீரோ. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்"

    • "வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கிறது படை தலைவன்.
    • முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படம் அமைந்து இருக்கிறது.

    மறைந்த விஜய்காந்தின் மகனாவார் சண்முக பாண்டியன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.

    "வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு படை தலைவன் என தலைப்பிடப்பட்டுள்ளது.

    டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

    திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்தாண்டு பூஜையுடன் தொடங்கியது. தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியீட்டு தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனது திருமண வீடியோ வெளியாகாமல் இருந்ததற்கு தனுஷ் தான் காரணம் என நயன்தாரா குற்றச்சாட்டு.
    • எங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் குறித்து பதில் கூற எங்களுக்கு நேரமில்லை.

    நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் வெளியானது.

    'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், கடந்த 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிட்டது.

    இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    அதே சமயம் நயன்தாரா- விக்னேஷ் சிவன் பதிவுக்கு, நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து எந்த பதிலும் தற்போது வரை வரவில்லை.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதுதொடர்பாக அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசிய கஸ்தூரி ராஜா, "எங்களுக்கு வேலை தான் முக்கியம். நிற்க நேரமில்லாமல் நாங்கள் ஓடி கொண்டிருக்கிறோம். எங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் குறித்து பதில் கூற எங்களுக்கு நேரமில்லை. என்னைப் போலவே எனது மகனுக்கும் வேலை தான் முக்கியம்" என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "நயன்தாரா தடையில்லா சான்றிதழ் பெற 2 ஆண்டுகள் தனுசுக்காகக் காத்திருந்ததாக கூறியது எல்லாம் பொய். இது தொடர்பாக இதற்கு மேலும் பேச எனக்கு விருப்பமில்லை" என்று தெரிவித்தார். 

    கஸ்தூரிராஜாவுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், ரஜினிகாந்துக்கு எதிராக பைனான்சியர் முகன்சந்த் போத்ரா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. #Rajinikanth #MadrasHighCourt
    சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் முகன்சந்த் போத்ரா.

    இவர், திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுசின் தந்தையுமான கஸ்தூரிராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

    அது தொடர்பான ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்தார். அதனால் கடன் கொடுத்தேன் என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து முகன்சந்த் போத்ரா தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி, நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    இந்த குற்றச்சாட்டினால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறி நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் குற்றவியல் கோர்ட்டில் முகன்சந்த் போத்ரா தாக்கல் செய்தார். 

    இந்த வழக்கு விசாரணைக்கு முகன்சந்த் போத்ரா தொடர்ந்து ஆஜராகவில்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முகன்சந்த்போத்ரா வழக்கு தொடர்ந்தார்.



    இதற்கிடையே தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ரஜினி தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் உரிமையியல் வழக்கை நிராகரிக்கக் கோரிய கருத்தின் அடிப்படையில் இந்த வழக்கை தொடர முடியாது, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவருடைய வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்தது. 

    இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி உத்தரவு இன்று வெளியாகி இருக்கிறது. அதில், ரஜினிகாந்த்துக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்து உத்தரவிட்டார். #Rajinikanth #MadrasHighCourt #MuganchandBothra

    ×