என் மலர்
சினிமா செய்திகள்

My Appa My Hero..! தனுஷின் தந்தையர் தின நெகிழ்ச்சி பதிவு
- சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் தனுஷ் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நீங்கள் எனக்காக செய்த தியாகங்களுக்கு நன்றி என்ற வார்த்தை பத்தாது. நான் இன்று இருப்பதற்கு காரணம் நீங்கள் தான். மை அப்பா மை ஹீரோ. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்"






