என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 2010 ஆம் ஆண்டில் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை எமி ஜாக்சன்.
    • எமி ஜாக்சனுக்கு ஏற்கனவே ஜார்ஜ் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.

    2010 ஆம் ஆண்டில் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை எமி ஜாக்சன். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏக் தீவானா தா, தாண்டவம், தங்க மகன், கெத்து, தெறி மற்றும் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    எமி ஜாக்சன் மற்றும் அவரது காதலனான எட் வெஸ்ட்விக் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர்.

    எமி ஜாக்சனுக்கு ஏற்கனவே ஜார்ஜ் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். சில காரணத்தினால் அவர்களுக்கு ஒத்துப்போவாதலால் விவாகரத்து செய்துக் கொண்டனர்.

    இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு எமி, எட் வெஸ்ட்விக்கை காதலிக்க தொடங்கினார். எட் ஒரு பிரபலமான பிரிட்டிஸ் நடிகராவார். நீண்ட நாட்கள் காதலர்களாக வலம் வந்த இந்த ஜோடி இன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

    இதுக்குறித்து எமி அவரது திருமண புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் அழகான வெண்மையான கவுன் மற்றும் கோட் சூட் கையில் பூங்கொத்துடன் காணப்படுகின்றனர். இப்புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்பாடலிற்கு கோல்டன் ஸ்பேர்ரோ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.
    • இதனால் இப்பாடலின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

    இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்து இருந்தனர்.

    இப்பாடலிற்கு கோல்டன் ஸ்பேர்ரோ என்ற தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்பாடலைக் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிரியங்கா மோகன் மடி சேரி லுக்கில் இருக்கிறார்.

    இதனால் இப்பாடலின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்ன்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் திரையுலகில் "வாகை சூடவா" திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா.
    • ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ (AATREYA DANCE STUDIO) என்ற பெயரில் புதிய நடனப் பள்ளியை துவங்கி இருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் "வாகை சூடவா" திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. நடிப்பு மட்டுமின்றி பலதுறைகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை இனியா புதிதாக நடன பள்ளி துவங்கியுள்ளார்.

     

    ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ (AATREYA DANCE STUDIO) என்ற பெயரில் புதிய நடனப் பள்ளியை துவங்கி இருக்கிறார். நடிகை இனியாவின் குரு அருண் நந்தகுமார் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோவின் இணை நிறுவனராக உள்ளார். துபாயில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகை இனியா மற்றும் அவரது குழுவினர் இணைந்து சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இதோடு விருது வழங்கும் நிகழ்ச்சியை பின்னணியில் இருந்து நேர்த்தியாக அனைவரும் ரசிக்கும் வகையில் இயக்கி இருக்கிறார் இனியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இனியா ஷோ டிரைக்டர் அவதாரமும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    நடனத்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீன கலை இரண்டையும் கலந்து புதுவித கலை வடிவம் கற்பிப்பதில் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ சிறந்து விளங்குகிறது. பல்வகை நடனங்களை கற்றுக் கொடுப்பதோடு, மேடை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள், பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழாக்கள், பிராண்டு அறிமுக நிகழ்வுகள், சிறப்பு விழாக்கள், பருவகால நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என பலவித நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஆத்ரேயா முழுவீச்சில் செயல்படுகிறது.

    ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ குழுவினர் சமகால நடனம், செமி கிளாசிக்கல், திரைப்பட நடனம், ஃபியூஷன், கதக், ஒடிசி, அக்ரோபடிக், ஏரியல், தீ நடனம், லத்தீன் நடனம், ஹிப்ஹாப் நடனம் மற்றும் பண்பாட்டு கலை வடிவங்களை மிக நேர்த்தியாக ஆடும் வல்லமை பெற்றுள்ளனர்.

    கலையை அதன் உண்மை வடிவத்தில் மக்களிடையே கொண்டுசேர்க்க ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ பாலமாக செயல்படும். கண்கவர் நிகழ்ச்சிகள், அழகிய கதைகளை கொண்டு சேர்த்தல் என ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ கலை நிகழ்ச்சிகள் தயாரிப்புக்கான ஒற்றை தளமாக விளங்குகிறது.

     

    கலைத்துறையில் பிசியாக வலம்வரும் நடிகை இனியா, அதே துறை சார்ந்த விஷயங்களில் பல புதிய முன்னெடுப்புகளை செய்து வருகிறார். அதன்படி அவர் ஏற்கனவே அனோரா ஆர்ட் ஸ்டூடியோ பெயரில் ஆடை வடிவமைப்பு மற்றும் ஸ்டூடியோ துறையிலும் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இதன் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், இந்தியாவை தொடர்ந்து மலேசியாவிலும் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ துவங்கப்பட்டது. தற்போது இந்த ஸ்டூடியோ இந்தியா மற்றும் மலேசியா என சர்வதேச கிளைகளை கொண்டுள்ளது.

     

     

    துபாயில் வைத்து ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ துவங்கப்பட்ட நிலையில், அங்கிருந்து இந்தியா திரும்பிய இனியா படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் உருவாகும் "ஸ்வீட்டி நாட்டி கிரேஸி" படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் "கேங்ஸ் ஆஃப் சுகுமாரகுருப்" படத்திலும், தமிழில் "சீரன்" என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட உள்ளது.
    • அக்டோபர் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் வேட்டையன்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கங்குவா' . 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. டிரைலரின் காட்சிகள் மிகவும் வைரலாகியது. இதே அக்டோபர் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் வேட்டையன்.

    வேட்டையன் திரைப்படத்தின் இயக்குனர் இதற்கு முன் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    தற்பொழுது கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிடுகின்றனர் என கூறுகின்றனர். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தாமதத்திற்கு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிக்காமல் இருப்பது தான் காரணம் என கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
    • தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார்.

    நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார். நடிகர் ரியாஸ் கான், செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக நடிகை ரேவடி குற்றம்சாட்டியுள்ளார்.

    தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார். கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் நடிகை ரேவதி சம்பத் கூறியுள்ளார்.

    தற்போது, ரியாஸ் கான் மீது புகார் தெரிவித்துள்ள ரேவதி, நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    • ஆரம்பத்தில் நான் இசைமயைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை பதித்தனர்.
    • பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும், நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. மெலடி மற்றும் பிஜிஎம் கிங் என்று ரசிகர்களால் அறியப்படும் யுவன் இசைத்துறையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் அமைத்துக் கொண்டுள்ளார். இவர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தி கோட் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். அப்போது, "எல்லோருக்கும் வணக்கம், உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு "தோல்வியில் இருந்து வெற்றி" அதைப் பற்றித் தான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்."

    "ஆரம்பத்தில் நான் இசைமயைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை பதித்தனர். அதன்பிறகு நான் தனி அறையில் அமர்ந்து, கதவை பூட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பேன். எங்கு தவறு நடந்தது என்று யோசிப்பேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்க துவங்கினேன். இப்படித் தான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். இதில் உள்ள யோசனை என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும், நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்."

    "எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது. உங்கள் தலை நிமிர்ந்த படி எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். இதனால் தான் என்னால் இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்து நிற்க முடிகிறது. எனக்கு வரும் கருத்துக்கள், பேச்சுகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால், இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள்," என்று பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்).
    • படக்குழு மலேசியாவில் இன்று ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). திரைப்படம் வரும் செப் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    படக்குழு முடிந்த அளவுக்கு தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். படத்தின் ஸ்பெஷல் சாங் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

    படக்குழு மலேசியாவில் இன்று ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் வெங்கட் பிரபு அடுத்து தான் இயக்க இருக்கும் படத்தை பற்றிய தகவலை கூறினார். வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படத்தை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் அவர் ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்தப்பின் இத்திரைப்படத்திற்கான பணிகள் தொடரும் என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் தக் லைஃப்.
    • சில நாட்களுக்கு முன் சிம்பு இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கினார்.

    இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் தக் லைஃப். இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

    தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    சில நாட்களுக்கு முன் சிம்பு இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியதாக அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். த்ற்பொழுது மீண்டும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் இருப்பது போன்ற புகைப்படத்தை சிம்பு அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (
    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதுக் குறித்து வெங்கட் பிரபு சுவாரசியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். கோட் படத்தின் ஸ்பெஷல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடப் போவதாகவும். அப்பாடலில் நடிகை திரிஷா மற்றும் விஜய் இணைந்து ஆடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
    • கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது சதீஷுக்கு.

    நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். அதைத்தொடர்ந்து வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

    கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது சதீஷுக்கு. அதைத்தொடர்ந்து சட்டம் என் கையில் எனும் படத்தில் நடித்து வருகிறார் இப்படம் ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில வருடங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார். சதீஷுடன் இணைந்து வித்யா பிரதீப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
    • இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிகிறது. இந்த படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதற்காக அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.

     


    எனினும், தற்போதைய தகவல்களின் படி ஆயுஷ்மான் குர்ரானா கங்குலி வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிக்க இருந்த பாத்திரத்தை வங்காள மொழி நடிகரான பிரசென்ஜித் சாட்டர்ஜீ நடிப்பார் என்று தெரிகிறது.

     


    பிரசென்ஜித் சாட்டர்ஜீ இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியின் நெருங்கிய நண்பர் ஆவார். 61 வயதான சாட்டர்ஜி இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கங்குலி படத்தில் நடிப்பது பற்றி படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக சவுரவ் கங்குலி வாழ்க்கை வரலாற்று படத்தில் பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆயூஷ்மான் குர்ரானா ஆகியோர் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். 

    • வாழை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • வாழை திரைப்படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள் என்று விஜய் சேதுபதி கோரிக்கை.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் வாழை படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் சேதுபதி, "மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படம் மிக அற்புதமான திரைப்படம். படத்தை பார்த்த பிறகு படம் முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் அந்த படத்துடன் இருப்பது போன்றே இருக்கிறது. வாழை திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியல், வசனம், நடித்த அனைவரும், அந்த ஊரில், அவர்களின் வாழ்க்கைக்கு மத்தியில் அந்த ஊர்காரர்களில் ஒருவராக அங்கிருந்து இன்னும் வெளி வர முடியாமல் மாட்டிக் கொண்டு இருக்கிறேன்.

    வாழை திரைப்படம் எடுத்ததற்கு மாரி செல்வராஜுக்கு நன்றி. இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை பதிய வைத்ததற்கும் நன்றி. சாதாரணமாக கடந்து போகிற செய்திகளுக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்ததற்கு நன்றி. இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது, நம் வாழ்க்கையின் மீது நமக்கு உள்ள சில கேள்விகளை எழுப்பும் என நம்புகிறேன். வாழை திரைப்படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள். உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும்" என்று பேசினார்.

    விஜய் சேதுபதி பேசிய இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார். அந்த எக்ஸ் பதிவில், வாழை திரைப்படத்தை பார்த்த பின் தன் உணர்வை பெரும் உருக்கத்தோடு பகிர்ந்துகொண்ட தமிழ்சினிமாவின் மக்கள் செல்வன் அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் " என்று பதிவிட்டுள்ளார்.

    ×