என் மலர்
சினிமா செய்திகள்
- ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் சத்தமாக பேசுவதற்கும் பாடுவதற்கும் தடை விதிப்பு.
- பெண்கள் வெளியே வரும் போது முகம் உள்பட உடல் முழுவதும் மறைக்கக்கூடிய உடையை அணிய வேண்டும்.
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பெண்களுக்கான உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன.
பெண்கள் கல்வி கோர்க்கவும் வேலைக்குச் செல்லவும் தலிபான் அரசு அனுமதி மறுத்து வருகிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போது முகம் உள்பட உடல் முழுவதும் மறைக்கக்கூடிய உடையை அணிய வேண்டும் என்றும் ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியில் செல்லக் கூடாது, விமானங்களில் பயணிக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் சத்தமாக பேசுவதற்கும் பாடுவதற்கும் தடை விதித்து புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலிபான் அரசு எச்சரித்துள்ளது.
தாலிபான் அரசின் இந்த கொடூர சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.

- அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை.
- இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு உரிய நிவாரணம் நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்
ஐதராபாத்தின் மாதப்பூர் நகரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற கட்டிடம் உள்ளது. இதில் பிரபலங்களின் இல்லத் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்பு உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. இந்த கட்டிடம் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதிகாரிகள் தற்போது இடித்துள்ளனர். 10 ஏக்கர் பரப்பளவில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் தும்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கட்டடம் இடிக்கப்பதற்கு கண்டம் தெரிவித்து நாகார்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'எனது கருத்தரங்கு கட்டடத்தை தீர்ப்பு வரும் வரை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ள நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக தற்போது இடித்துள்ளார்கள். இந்த இடம் பட்டாவில் இருக்கிறது. ஒரு இன்ச் கூட ஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை.
தவறான தகவலால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை. நான் சட்டத்தை மதிப்பவன். நீதிமன்றத்தில் என் மீது தவறெனத் தீர்ப்பு வழங்கப்பட்டால் நானே அந்த கட்டடத்தை இடித்திருப்பேன். தற்போது அதிகாரிகளால் தவறாக இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு உரிய நிவாரணம் நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
- ரஞ்சித்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
- செய்தியாளர்களிடம் பேசிய சித்திக், என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் பதில் அளிப்பேன் என்றார்.
கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா கமிஷன் தனது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு அரசிடம் சமர்பித்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தகவல் ஆணையத்தின் தலையிட்டால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டது. மலையாள திரைப்பட உலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கை வெளியானது முதல் மலையாள சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலரும் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானது குறித்து தற்போது புகார்களை தெரிவித்து வருகின்றனர். கேரள திரைப்பட அகாடமி தலைவரும், நடிகரும் பிரபல டைரக்டருமான ரஞ்சித் மீது, மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பாலேரி மாணிக்கம் படத்தில் நடிக்க என்னை ரஞ்சித் அழைத்தார். அப்போது ஓட்டல் அறையில் வைத்து, அவர் எனக்க பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்தார். எனது வளையல்களை தொடுவது போல் கைகளை தடவினார். தலைமுடியையும் கோரி விட்டார். அவரது தவறான நோக்கத்தை புரிந்து கொண்ட நான் அந்தப் படத்தில் இருந்து விலகி விட்டேன். பின்னர் அந்தப் படத்தில் நடிக்கவே இல்லை என்றார்.
எனது குற்றச்சாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் கோர்ட்டு வழக்கு என கேரளாவுக்கும் மேற்கு வங்காளத்துக்கும் என்னால் அலைய முடியாது. யாராவது எனக்கு உதவினால் புகார் அளிக்க தயாராக உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் புகார்களை தொடர்ந்து ரஞ்சித்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிட்டவருமான ஆனிராஜா, புகாரில் சிக்கிய டைரக்டர் ரஞ்சித் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். அவருக்கு எதிராக பேரணி நடத்தப் போவதாக இந்திய வாலிபர் சங்கம் அறிவித்தது.
இந்த சூழலில் நேற்று வயநாட்டில் இருந்து கோழிக்கோடு வந்த ரஞ்சித், தனது காரில் மாட்டியிருந்த அகாடமி சேர்மன் என்ற பெயர்பலகையை அகற்றி விட்டு தான் வந்தார். எனவே அவர் விரைவில் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் மலையாள திரைப்படகலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்து மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்.
சித்திக்கிடம் இருந்து தனது நண்பர்கள் பலரும் இது போன்ற கொடுமையை அனுபவித்துள்ளது பின்னர் தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் நடிகை ரேவதி சம்பத் கூறியுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அம்மா அமைப்பின் தலைவர் மோகன்லாலுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், என் மீதான குற்றச்சாட்டு களை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்திக், என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் பதில் அளிப்பேன் என்றார்.
இதற்கிடையில் நடிகை ஜூபிதா, மோகன்லாலின் திரிஷ்யம் படத்தில் நடித்த ஹன்சிபாஹசன் ஆகியோ ரும் வேறு சிலர் மீது பாலி யல் புகார்களை தெரிவித்து உள்ளனர்.
- வாழை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- வாழை படத்தை பாராட்டி இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வாழை படத்தை பாராட்டி இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்கும் போது நாம் வாழ்ந்த தருணங்கள் மீண்டும் கண் முன் வந்து போகும். வலி நிறைந்த ஒரு தருணத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் கலையாக படைத்து நெஞ்சத்தை கலங்க வைத்து விட்டார். ! All the love to you brother" என்று பதிவிட்டுள்ளார்.
- விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.
- கோலி சோடா ரைசிங் படத்தின் டீசர் இன்று வெளியாகியது.
இயக்குனர் விஜய் மில்டன் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதைத்தொடர்ந்து தற்பொழுது விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இத்தொடர் 2014 ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா மற்றும் 2018 ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா 2 படங்களின் தொடர்ச்சியாகவே அமைந்து இருக்கிறது.
படத்தின் டீசர் இன்று வெளியாகியது. இத்தொடர் விரைவில் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது. தொடரில் சேரன், புகழ், அம்மு அபிராமி, ஜான் விஜய், அவந்திகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்க்ளுடன் படத்தின் நாயகனான கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி மற்றும் முருகேஷ் நடித்துள்ளனர்.
இத்தொடர் கோலி சோடா 1 படத்தின் அடுத்ததாகவும் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு முன் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
- படத்தின் அடுத்த பாகம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்தார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் கடந்த 15 ஆம் தேதி வெளியாகியது. இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது திரைப்படம் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படம் இந்த வாரம் வெளியானாலும் தமிழ் நாடு முழுக்க டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் இன்னும் பல ஸ்கிரீன்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
படத்தின் அடுத்த பாகம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்தார். இந்நிலையில் படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.
- கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது சதீஷுக்கு.
நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். அதைத்தொடர்ந்து வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.
கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது சதீஷுக்கு. அதைத்தொடர்ந்து சட்டம் என் கையில் எனும் படத்தில் நடித்து வருகிறார் இப்படம் ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில வருடங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார். சதீஷுடன் இணைந்து வித்யா பிரதீப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல கன்னட நடிகர் உபேந்திரா கூலி படத்தில் நடிக்கவுள்ளார்.
- படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.
படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல கன்னட நடிகர் உபேந்திரா கூலி படத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் முழு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் வெளிவரவில்லை.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு மாசான பாட்டிற்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உபேந்திரா இதற்கு முன் விஷால் நடித்த சத்யம் படத்தில் நடித்து இருந்தார். இவர் கன்னடம் அல்லாது பிர மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளிவந்த சன் ஆஃப் சத்யமூர்த்தி மற்றும் கானி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட்டானது. உபேந்திரா நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்து யூஐ என்ற கன்னட படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி '.
- . இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ் ஸ்டோரி '.
தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
.இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
- இப்பாடலிற்கு கோல்டன் ஸ்பேர்ரோ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலுக்கான ஃபைனல் மிக்சிங் முடிவடைந்தது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் குமார் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது.
இப்பாடலிற்கு கோல்டன் ஸ்பேர்ரோ என்ற தலைப்பு வைத்துள்ளனர். பாடல் விரைவில் வரப்போவதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்ன்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.
இப்பாடலுக்கும், இப்படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று ரிலீசுக்கும் தயாராகவுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
படத்திற்கு தணிக்கை வாரியம் யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் போட்டோ ஸ்டில்ஸ்சை படட்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாழை படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார், மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் வாழை படத்தை இயக்குநர் பாரதிராஜா பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோவின் லிங்க்கை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய பாரதிராஜா, "சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பாரத்து யோசித்தது உண்டு. 'வாழை' அப்படியொரு படம். படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார், மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.
சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களை எல்லாம் விஞ்சுகிற வகையில் என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் பண்ணியிருக்கான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்லுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் அவரது பதிவில், "நிறைய தருணங்கள் என்னை பற்றியான உங்கள் சொற்களில் நின்று இளைப்பாறியிருக்கிறேன். இன்று நானே ஒரு செடியாய் துளிர்க்கிறேன். இயக்குனர் இமயத்திற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.






