2K லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது.

ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி '.. இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
2K லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது.
Published on

City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ் ஸ்டோரி '.

தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

.இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com