என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இந்த கன்வென்ஷன் சென்டர் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
    • இதில் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    ஐதராபாத்தின் மாதப்பூர் நகரில் பிரபல நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற கட்டிடம் உள்ளது. இதில் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.

    இந்த கட்டிடம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் இன்று காலை முதல் அதனை இடிக்க துவங்கியுள்ளனர்.

    இந்த கட்டடம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 10 ஏக்கரில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் தும்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
    • மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு நடிகை சீத்தல் தம்பி நோட்டீஸ்.

    அசுரன், துணிவு திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மஞ்சு வாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு Footage பட நடிகை சீத்தல் தம்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த நோட்டீசில், "மஞ்சு வாரியரின் மூவி பக்கெட் நிறுவனம் தயாரித்த Footage படத்தில் போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியதால் தனக்கு காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் உட்பட எந்த வசதிகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்து கொடுக்காததால் எனது உடல்நிலை மேலும் மோசமானது.

    அப்படத்தில் நடிக்க தனக்கு ரூ1.80 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டது . ஆனால் அப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காயங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு பல லட்சம் செலவானது. ஆகவே என்னுடைய காயங்கள் மற்றும் மருத்துவ செலவிற்காக ரூ.5.75 கோடி இழப்பீட்டை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன்" என்று சீத்தல் தெரிவித்துள்ளார்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை.
    • இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் பாடல் ஜூக் பாக்ஸ் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

    மாரி செல்வராஜ் அவரது சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் நாட்களில் மக்களின் ஆதரவை இன்னும் அதிகமாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி, பாடல் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

    சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. அதன் தொடர்ச்சியாக அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தார்.

    நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நேற்று (ஆகஸ்ட் 22) காலை அறிமுகம் செய்து வைத்தார். இதை கொண்டாடும் விதமாக நடிகர் சௌந்தரராஜா, அவர்மீது உள்ள பாசத்தின் காரணமாக, அவரின் அன்புதம்பியும், மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக அறக்கட்டளை சார்பாகவும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை தனது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து சென்று, அங்குள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வைத்து விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சணையும், பூஜையும் செய்து, கட்சி கொடியை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.

     

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய்யிடம் வழங்க முடிவு செய்துள்ளார். மேலும், விஜய் மற்றும் அவர் துவங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோவிலில் வேண்டினார்.

    சிறப்பு பூஜையை தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா மதுரை மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுகத்தை கொண்டாடும் வகையில், இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மீது தான் கொண்டுள்ள தீரா அன்பு மற்றும் தமிழக மக்கள் மீது தலைவர் விஜய் வைத்துள்ள பேரன்பின் வெளிப்பாடாக நடிகர் சௌந்தரராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியதாக தெரிவித்தார்.

    • இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிக்கவுள்ளார்.
    • படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

    சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

    கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

    இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் "விருந்து".
    • இப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

    நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் "விருந்து".

    கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் கண்ணன் தாமர கண்ணன்.

    அர்ஜூன் உடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர் மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் எழுத்தாளர் தினேஷ் பள்ளத், இசையமைப்பு பணிகளை ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் ஆகியோர் மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பு பணிகளை வி.டி. ஸ்ரீஜித் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை சஹாஸ் பாலா, பாடல்களை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.

    முழுக்க முழுக்க ஆக்சன், ஃபேமிலி சென்டிமென்ட், திரில்லர் சாயலில் படம் முழுவதும் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை யாரும் யூகிக்க முடியாத வகையில் படமாக்கி இருப்பது இப்படத்தின் சிறப்பு.

    இப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராயனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

    இப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது இரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலுக்கான ஃபைனல் மிக்சிங் முடிவடைந்தது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்ன்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

    இப்பாடலுக்கும், இப்படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கங்குவா அக்டோபர் 10-ந்தேதி வெளியாகிறது.
    • வெளிநாட்டு உரிமைகளை PHARS FILMS நிறுவனம் வாங்கி உள்ளது.

    தமிழ் சினிமாவில் வரிசையாக கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் முதன்முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம்தான் கங்குவா.

    வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக கங்குவா தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார்.

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டுள்ள இந்தபடம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 10-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்பட 10 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

    இந்த நிலையில் "கங்குவா" படத்தின் முழு வெளிநாட்டு உரிமைகளையும் PHARS FILMS நிறுவனம் 40 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் வெளிநாட்டு திரையரங்கு உரிமைகளுக்காக இந்திய படத்திற்கு இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். ஒரு மல்டிஸ்டாரர் பெரிய பட்ஜெட் இந்தி படம் கூட இதற்கு முன் இந்த விலைக்கு விற்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் நடிகர் சூர்யாவின் கெரியரிலேயே அதிக தொகைக்கு விற்பனையான படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
    • நடிகை மேகா ஆகாஷ் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

    தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷிற்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மேகா ஆகாஷ்.

    தனுசுக்கு ஜோடியாக நடித்து, `மறுவார்த்தை பேசாதே' பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

    ஹீரோயின்கள் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் அல்லது சக நடிகர்களைத் திருமணம் செய்து கொள்வது மிக சகஜமான ஒரு விஷயம் ஆகிவிட்டது.

    இந்த வரிசையில் பிரபல அரசியல்வாதியின் மகன் சாய் விஷ்ணு என்பவரை நடிகை மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தன்னுடை வலைதள பக்கத்தில் அவரிடைய நிச்சயதார்த்த போட்டோக்களை பகிர்ந்து அதில், தன்னுடைய ஆசை நிறைவேறியதாக' தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் சூர்யா.
    • கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் 10- ந்தேதி திரைக்கு வர உள்ளது.

    தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

    வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான கங்குவா ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10- ந்தேதி திரைக்கு வர உள்ளது.

    இதுதவிர சூர்யா தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது. அந்த படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

    சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறார். Dassault Falcon 2000 என்கிற இந்த பிரைவேட் ஜெட்டின் விலை 120 கோடி ரூபாய் ஆகும். என்ற தகவல் பரவி வந்தது.

    இந்த நிலையில் சூர்யா தரப்பில் இது முற்றிலும் வதந்தி என்றும், சூர்யா தனி விமானம் வாங்கி உள்ளார் என்ற எதிர்மறையான கருத்துகள் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை.
    • மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாழை படத்தை பார்த்து விட்டு சோகத்துடன் வெளியே வந்த இயக்குநர் பாலா, மாரிசெல்வராஜை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பின்பு சிறிது நேரம் மாரி செல்வராஜ் பக்கத்தில் அமர்ந்த பாலா தன்னை ஆசுவாசப்படுத்தினார்.

    மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

    இந்நிலையில் தற்பொழுது நடிகர் கார்த்தி , அனுபமா பரமேஸ்வரன், தனுஷ், மணி ரத்னம், போன்ற திரைப்பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×