என் மலர்
சினிமா செய்திகள்
- தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஸ்கின்.
- இப்படத்தின் சில புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஸ்கின். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கினார்.
அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியான கதாப்பாத்திரத்தில் மிஸ்கின் நடித்தார். 2023 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி வைத்து டிரெயின் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் சில புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். முகம் முழுவதும் அடர்த்டியான தாடியுடன் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இருக்கிறார். இப்படத்திற்கு ஃபௌசியா பாதிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் இதற்கு முன் உயிர், விசில், இவன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு ஒளிப்பதிவு செய்யும் திரைப்படம் ட்ரைன் ஆகும்.
ட்ரைன் படத்திற்கு மிஸ்கின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலிற்கு ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன்.
- இந்த படம் வெளியான ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது.
தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இதில், தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களை விட ராயன் அதிக வசூல் செய்துள்ளது.
இந்த படம் வெளியான ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் ராயன் முதல் இடத்தில் உள்ளது.
இப்படம் நாளை ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் படத்டின் இயக்குனர் மற்றும் நடிகரான தனுஷை அழைத்து ராயன் படத்தின் வெற்றியை கொண்டடும் விதமாக இரண்டு காசோலையை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை'
- இப்படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.
திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளனர். அதில் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கு மட்டும் டிக்கெட் இலவசம் முதல் நாள் மட்டும் என அறிவிப்பை அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை இன்று நடிகர் விஜய் வெளியிட்டார்.
- தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.
சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை இன்று நடிகர் விஜய் வெளியிட்டார்.
சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தொண்டர்களின் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம் என்று கூறினார்.
இந்நிலையில் விஜய்க்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா என கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய பிரம்மாண்டமான இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாழை படம் நாளை வெளியாகிறது.
- வாழை படத்தின் Pre Release விழா சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்தது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாழை படத்தை பார்த்து விட்டு சோகத்துடன் வெளியே வந்த இயக்குநர் பாலா, மாரிசெல்வராஜை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பின்பு சிறிது நேரம் மாரி செல்வராஜ் பக்கத்தில் அமர்ந்த பாலா தன்னை ஆசுவாசப்படுத்தினார்.
மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பென் அப்லெக்கிடம் இருந்து அவரது மனைவி ஜெனிபர் லோபஸ் விவாகரத்து கோரியுள்ளார்.
- ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார்.
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர்
இந்நிலையில் பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெனிபர் லோபஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் தாங்கள் கடந்த ஏப்ரல் 26-ந்தேதி முதல் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிபர் லோபஸ் விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ளார்.
ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார். இதற்கு முன்பு லோபஸ் நடிகர் ஓஜானி நோவா, நடனக் கலைஞர் கிறிஸ் ஜட் மற்றும் பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை திருமணம் செய்திருந்தார்.
இதேபோல் நடிகர் பென் அப்லெக் ஏற்கனவே நடிகை ஜெனிபர் கார்னரை திருமணம் செய்திருந்தார்.
இந்நிலையில், பென் அப்லெக்கும் ஜெனிபர் லோபசும் விவாகரத்திற்கு பின்பு தங்களது சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்று திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம் என்பது ஒவ்வொருவரின் சொத்துக்களும் கடன்களும் விவாகரத்திற்கு பின்பு எவ்வாறு பிரிக்கப்படவேண்டும் என்பதை பற்றிய ஒப்பந்தமாகும்.
அதனால் திருமணத்திற்கு பின்பு இருவரும் சம்பாதித்த பணம் மற்றும் வாங்கிய சொத்துக்கள் இருவருக்கும் சரிபாதியாக பங்கிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
பென் அப்லெக்க்கை விட லோபஸ் அதிக வருவாயை கொண்டுள்ளதால் இந்த விவகாரத்தால் அதிக சொத்துக்களை லோபஸ் இழப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் தனுஸ்ரீ தத்தா நடித்துள்ளார்.
- இந்தி நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்திருந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது.
இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது. அதே சமயத்தில் மொத்த மலையாள திரையுலகமும் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் உள்ளது என்றும், பல நடிகைகள் ஓட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், ஹேமா கமிட்டியின் அறிக்கையால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "2017-ல் நடந்த ஒரு விஷயத்தை பற்றி அறிக்கை தயாரிக்க அவர்களுக்கு 7 வருடங்கள் தேவைப்பட்டனவா? இந்தப் புதிய அறிக்கையினால் என்ன பயன்? அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின்முன் தண்டிப்பதுதான்.
விசாகா கமிட்டியை பற்றி கேள்விப்பட்ட ஞாபகம் இருக்கிறது. பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்காக பக்கம் பக்கமாக பல வழிகாட்டுதல்களை முன்வைத்தது. அதன் பிறகு என்ன நடந்தது? கமிட்டிகள் பெயர் மட்டும் தான் மாறிக்கொண்டே இருக்கிறது.
இந்தக் கமிட்டிகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்த அறிக்கைகள் மற்றும் கமிட்டிகள் நமது நேரத்தை தான் வீணடிக்கிறது. பாதுகாப்பான பணியிடம் என்பது ஒரு பெண்ணுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமையாகும்.
பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும். மக்கள் நடிகைகளை மனிதர்களாகப் பார்க்கவில்லை. எங்களை ராணிகளைப் போல நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமையும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையும் எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.
தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். "2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிரஞ்சீவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் ஆக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. அவரது இயற்பெயர் கோனிடெலா சிவசங்கரா வரபிரசாத். தீவிர அனுமான் பக்தரான இருந்து வந்த இவர் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க, சினிமாவில் நடிக்கும்போது தனது பெயரை சிரஞ்சீவி என மாற்றிக்கொண்டார்.
1978இல் வெளியான பிராணம் கரீது என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் இந்திய ஹீரோ என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிரஞ்சீவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.
- 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது.
குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியை நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி 100 கோடி வசூலைத் தாண்டியது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது.
நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.
மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில், மகாராஜா படத்தில் நடிக்க முதலில் சாந்தனுவை அணுகியதாக அப்பட இயக்குநர் நித்திலன் தெரிவித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.
இதனையடுத்து, மகாராஜா படத்தை சாந்தனு தவறவிட பாக்யராஜ் தான் காரணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததிற்கு இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி. என்னை முதலில் இந்த கதைக்கு தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், இந்த படத்தை நான் மிஸ் செய்ததிற்கு என் அப்பாவோ இல்லை நானோ காரணம் இல்லை. அப்பாவிற்கு இயக்குநர் என்னிடம் வந்து கதை சொன்னது தெரியாது. அந்த சமயத்தில் தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுப் பல விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்த படம் நாளை மறுநாள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெள்ளிக்கிமை வெளியாக உள்ளது.
படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ், நடிகர் சூரி மற்றும் பிற நடிகர்கள் சூட்டிங் ஸ்பாட் அனுபவம் மற்றும் படத்தின் கதை குறித்து பேசும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கொட்டுக்காளி என்பது தென் தமிழக பகுதிகளில் சாதாரணமாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தைதான். ஒரு பெண் தனக்கு விருப்பமானதை செய்யும்போதும், அது ஊராருக்கு தவறாக தெரிந்தால் அந்த பெண்ணை அவர்கள் கொட்டுக்காளி என்று அழைப்பார்கள் என்று இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோல சூரியும், நடிகை அன்னா பென் உள்ளிட்டோரும் படம் குறித்த தங்களது பார்வையை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாழை படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
- நடிகர் சிலம்பரசன் வாழை படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை நேரில் அழைத்துப் பேசியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களின் பார்வையை வெளிப்படுத்தினர்.
அந்த வகையில், நடிகர் சிலம்பரசன் வாழை படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை நேரில் அழைத்துப் பேசியுள்ளார். மேலும் படம் குறித்த தனது பார்வையை வீடியோவிலும் பேசி பதிவு செய்துள்ளார். வாழை படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும். படம் சிம்பிளான ஒரு படம் தான் ஆனால் படத்திற்குள் அவ்வளவு வலி இருக்கிறது என்றும் சிம்பு தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்
- ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.
குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய மகாராஜா திரைப்படம் அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான மகாராஜா 100 கோடி வசூலைத் தாண்டியது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது. நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.
முன்னதாக கரீனா கபூர், கீர்த்தி சானோன்,தபு ஆகியோர் நடித்த Crew திரைப்படம் 17.9 மில்லியன் பார்வைகளுடனும், லாப்பாட்டா லேடீஸ் படம் 17.1 மில்லியன் பார்வைகளுடனும் முன்னிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.






