என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்ஸ்டாகிராமில் 91.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் இருந்து வந்தார்.
    • கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்

    பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை விட அதிக ஃபாலோயர்களை பெற்று பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271  மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்திலும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 91.8  மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவில் இவர்களுக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராமில் 91.3  மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ஷ்ரத்தா கபூரின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 91.4  மில்லியன் அதிகரித்துள்ளது. இதனால் பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஷ்ரத்தா கபூர்.

    கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷ்ரத்தா கபூர் நடித்த 'ஸ்ட்ரீ 2' படம் வெளியாகி கவனம் ஈர்த்துவரும் நிலையில் ஒரே வாரத்தில் படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த படத்தின்மூலம் தற்போது அதிகம் பேசப்பட்டுவரும் ஷ்ரத்தா கபூரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையும் இதனாலேயே அதிகரித்துள்ளது.

    85.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் ஆலியா பட், 80.4 மில்லியன் ஃபாலோயர்களுடன் கத்ரினா கைஃப் மற்றும் 79.8  மில்லியன் ஃபாலோயர்களுடன் தீபிகா படுகோன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

     


    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இது கோலிவுட்டில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற டிரைலர் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில், தி கோட் படத்திற்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்று வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொட்டுக்காளி படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை.
    • கொடுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் கொட்டுக்காளி. இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது.

    சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த வரிசையில், கொட்டுக்காளி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் பாராட்டினார்.

    இத்துடன் படக்குழுவை பாராட்டி நடிகர் கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கொட்டுக்காளி என்ற மத்திய அரசுச் சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்தில் இருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்ற குறிப்பைப் பார்த்ததுமே தமிழ் சினிமா ராக் யுகத்திலிருந்து மீண்டு நவீன கதைசொல்லி ஒருவனின் களமாகிவிட்டது புரிகிறது."

    "தம்பி சூரியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் இல்லை மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் தெரியவில்லை, பாண்டியன் எனும் கதாபாத்திரம்தான் தெரிந்தார். காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடியலுக்காகக் கூட கூவாமல் குழம்பி நிற்கிறது."

    "மறுபுறம் நம் கண்ணுக்குத் தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்தச் சேவலையே வெறித்துப் பார்க்கிறாள் 'கொட்டுக்காளி' டைட்டில் திரையில், கண் இமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறித் தப்பிக்கிறது சேவல், வெறித்துப் பார்த்த பெண்ணின் கண்ணில் சின்ன எதிர்பார்ப்பு, பின் இரு உறவினர்கள் சேவலை துரத்திப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்."

    "பெண்ணின் கண்ணில் நம்பிக்கை மங்குகிறது. இவள்தான் நாயகி உலகத்தைத் தலைகீழாக அண்ணாந்து பார்த்தபடி அறிமுகமாகிறான் பாண்டி, அவன் கழுத்தில் ஒரு வெண்சுண்ணாம்புக் களியைத் தடவி விடுகிறாள் ஒரு பெண், பாண்டிக்குத் தொண்டைக் கட்டாகவும் இருக்கலாம் அல்லது புற்றுநோயின் ஆரம்பக் கட்டமாகக்கூட இருக்கலாம். ஓர் இளம்பெண்ணின் கல்லூரிக் காதலையும் கேன்ஸரையும் எந்த ஒரு புரிகலும் இல்லாது அணுகும் ஒரு கிராமத்துக் குடும்பம்."

    "கிராமம் என்றால், சிமென்ட் சாலை, வாகன வசதி, செல்ஃபோன், டாஸ்மாக், சானிட்டரி நாப்கின், 24 மணி நேர மின்சாரம் என 21-ஆம் நூற்றாண்டின் நவீன வசதிகள் நிறைந்த கிராமம். இருப்பினும் எங்க வீட்டு பிள்ளைக்குப் பேய் பிடிச்சுருக்கு. பேய் ஓட்டக் கூட்டிப்போறோம்' என்று விசாரிப்பவர்களிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன் வழிமொழிகிறது குடும்பம்."

    "போகிற வழியெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள் விற்கும் வண்டி ஒன்று பேயாய் ஆடிச்செல்கிறது. கண்ணேறு தவிர்க்கும் அசுர முகங்கள் இன்னொரு வண்டியில் பேயாடுகிறது. நடுவழியில் டாஸ்மாக் பேய் என்று பல பேய்களின் ஆட்டம் தென்பட்டாலும் அவை பூசாரிகளால் விரட்ட முடியாத பேய் எனப் புரிந்துகொள்கிறோம்."

    "இது பேய்க் கதைதான் காதல் பேய்க் கனத, நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை டைட்டில் கார்டில் வரும் 'இயற்கைக்கு நன்றி என்ற வாசகத்தின் பொருள், ஒளிப்பதிவிலும் ஒலிப்பதிவிலும் தெரிகிறது."

    "இயற்கைதான் படத்தின் இசை குலதெய்வக் கோயிவை நெருங்குகையில் சிறுவன் கார்த்திக் வாயால் கொடுக்கும் சினிமாப் பாணி பிள்னணி இசைதான் ஒரு சின்ன கிண்டலுடன் இந்தப் படத்தில் அவை இல்லை என்பதை நினைவுபடுத்துகிறது. ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன். பூசாரி என்று பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம் காலம் மாறிவிட்டதை மற்ற பாத்திரங்கள் புரிந்துகொள்ளாவிடினும் பார்வையாளர்களாகிய நமக்கு படம் பிடித்துக் காட்டப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர்.
    • ஜெனிபர் லோபஸ் விவாகரத்து மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தன.

    இந்த நிலையில் பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெனிபர் லோபஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

    அதில் தாங்கள் கடந்த ஏப்ரல் 26-ந்தேதி முதல் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிபர் லோபஸ் விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ளார்.

    ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார். இதற்கு முன்பு லோபஸ் நடிகர் ஓஜானி நோவா, நடனக் கலைஞர் கிறிஸ் ஜட் பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை மணந்திருந்தார்.

    இதேபோல் நடிகர் பென் அப்லெக், நடிகை ஜெனிபர் கார்னரை திருமணம் செய்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய ஒரு நிலத்தை வேண்டுமென்றே சிங்கமுத்து எனக்கு வாங்கிக் கொடுத்தார்.
    • சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    1991-ம் ஆண்டு முதல் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்தேன். என்னுடைய கடும் உழைப்பால் முன்னேறி, 300 படங்களுக்கு மேல் நடித்து, பிரபல நகைச்சுவை நடிகரானேன். இன்றளவும் என்னுடைய நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எதிர்மனுதாரர் நடிகர் சிங்கமுத்துவும், நானும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஒன்றாக பல படங்களில் நடித்தோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், புகழையும் தந்தது.

    ஒரு காலக்கட்டத்தில், எனக்கு கிடைக்கும் வரவேற்பு சிங்கமுத்துவுக்கு கிடைக்காததால், அவருக்கு பொறாமை உண்டானது. அதனால், என் மீது பகை கொண்டார். 2015-ம் ஆண்டுக்கு பின்னர், என்னைப் பற்றி மோசமாக பேசத் தொடங்கினார். அதனால், அவர் இல்லாமல் நடிக்கத் தொடங்கினேன்.

    இதற்கிடையில் தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய ஒரு நிலத்தை வேண்டுமென்றே சிங்கமுத்து எனக்கு வாங்கிக் கொடுத்தார். இதுகுறித்து சிங்கமுத்துவுக்கு எதிராக எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். அதுமட்டுமல்ல ஒரு துளி உண்மைக்கூட இல்லாத பல பொய்களையும் கூறியுள்ளார். இது எனக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை சிங்கமுத்து ஏற்படுத்தியுள்ளார்.

    அதனால், 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். என்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.ஜி.ரகுநாதன், என்.செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இதையடுத்து, இந்த மனுவுக்கு சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

    • தி கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தி கோட் படத்தின் தமிழ் மொழி டிரைலர் 24 மணி நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்ற கோலிவுட் டிரைலர் என்ற சாதனையை படைத்துள்ளது. தி கோட் படத்தின் டிரைலரை 24 மணி நேரத்தில் 3.3 கோடி பேர் பார்த்துள்ளனர்.

    மேலும், இதே காலக்கட்டத்தில் இந்த டிரைலருக்கு 1.2 கோடி லைக்ஸ் கிடைத்துள்ளன. இதுவரை இந்த டிரைலரை சுமார் 5 கோடிக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடாமுயற்சி படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
    • விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. .

    நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    விடாமுயற்சி அஜித் குமாரின் 62 ஆவது திரைப்படம் ஆகும். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக விடாமுயற்சி போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், தற்போது விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த போஸ்டர்களில் நடிகர் கணேஷ் சரவணன் மற்றும் தசரதி ஆகியோரின் தோற்றம் இடம்பெற்று இருக்கிறது.



    விடாமுயற்சி படம் நீண்ட காலம் படமாக்கப்பட்டு வருகிறது. எனினும், இதுகுறித்த அப்டேட்டுகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது படக்குழு அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்கள் மற்றும் மிக முக்கியமான நிகழ்வுகளை இந்த திரைப்படம்.
    • இத்திரைப்படம் வாழ்வியலை மட்டுமே சார்ந்த படம் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

    சென்னை:

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வீடியோ மூலம் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

    அதில் சிவகார்த்திகேயன் கூறியதாவது:-

    வாழை திரைப்படம் செல்வராஜ் வாழ்க்கையில் நடந்ததை சினிமா மூலம் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையில் நடந்த விஷயம் என்பதால் ஒரு சந்தோஷமான விஷயத்தை தாண்டி அவர் வாழ்க்கையில் நடந்த மிக பெரிய நிகழ்வை இப்படத்தில் காட்டியுள்ளார்.

    எளிய மக்களின் வலி, வேதனை, கண்ணீர், சந்தோஷம், சிரிப்புகளை அவர்கள் வாழ்க்கையை பதிவு செய்யும் போது அந்த சினிமா ரொம்ப அழகாக இருக்கிறது.

    அதைபோல் வாழை திரைப்படத்திலும் மாரி செல்வராஜ் அவர் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்கள் மற்றும் மிக முக்கியமான நிகழ்வுகளை இப்படத்தில் கூறியுள்ளார்.

    இப்படத்தை பார்க்கும் போது நமக்கு நெருக்கமான ஒருவரிடம் அவர்களில் கதை கேட்கும் போது என்ன உணர்வு வருமோ, அந்த உணர்வு தான் வாழை திரைப்படம். இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள், இசை, எல்லாம் நமக்கு நெருக்கமான ஒரு உணர்வு தருகின்றன.

    இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இது ஒரு உண்மை கதை என்பதால் அதிகமாக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    மாரி செல்வராஜ் மீண்டும் ஒருமுறை பெரிய திரையில் அவருடைய அனுபவத்தை மட்டுமல்ல வலிமையான இயக்குநர் என்பதையும் இப்படத்தில் நிரூபித்துள்ளார். அவருடைய கடந்த இரண்டு படமும் கமர்சியல் படமாக இருந்துள்ளது. இப்படம் முழுக்க முழுக்க வாழ்வியலை மட்டுமே சார்ந்த படமாகியுள்ளது என மாரி செல்வராஜ் அவர்களே கூறியுள்ளார்

    எனக்கு பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு ரொம்ப பிடித்த படமாக வாழை அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் யார்?, அவர் வாழ்க்கை என்ன?, அவர் என்னென்ன விஷயங்களை கடந்து இன்றைக்கு இயக்குநர் ஆனார்? என்பதை தெரிந்து கொள்வதற்கு இப்படம் ஒரு வாய்ப்பாக இருக்கும். இப்படம் விருதுகளை வாங்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.
    • வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடித்த நடிகர்களில் சிலர் டப்பிங் பேசுவதாக படக்குழு சார்பில் அப்டேட் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    இந்த வரிசையில், வேட்டையன் படத்தின் முதல் பாடல்- மனசிலாயோ அப்டேட் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளன. அதில் வேட்டையன் படத்தின் முதல் பாடல் மனசிலாயோ விரைவில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவ்வளோ நெருக்கமான விசயத்தையும், உருக்கமாக விசயத்தையும் எப்படி தாங்குறீங்க மாரி செல்வராஜ்.
    • 30 வருடம் தான் இந்த வாழை என்று எனக்கு தோன்றியது.

    சென்னை:

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் கூறியதாவது:-

    இந்த படத்தை பார்த்த பிறகு ரொம்ப பாரமா இருந்தது. இவ்வளவு நெருக்கமான விசயத்தையும், உருக்கமாக விசயத்தையும் எப்படி தாங்குறீங்க என்று நான் மாரி செல்வராஜிடம் கேட்டேன். அதற்கு அவர் 30 வருடம் ஆசுப்பா என்று கூறியுள்ளார். அந்த 30 வருடம் தான் இந்த வாழை என்று எனக்கு தோன்றியது.

    எதார்த்தம் எப்போது அழகானது. அந்த எதார்த்தம் அவர் வாழ்க்கையில் நடத்த ஒரு விசயத்தை வைத்து இவ்வளோ அழகாக படத்தை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் சொல்ல வயது இல்லை, நன்றியே சொல்லிக்கிறேன்.

    தமிழ் சினிமாக்கு இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்கு நன்றி. இத்திரைப்பத்தில் 2 குட்டி பையன் பொன் வேல், ராகுல் மிக அருமையாக நடித்துள்ளார்கள். அவர்கள் இருவரும் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    இத்திரைப்படம் ஒரு அருமையான படைப்பு. மாரி வெல்வராஜ் சார்-க்கும் அவரது டீம்-க்கும் நன்றி. எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள், நன்றி என்றும் என் அன்பு மட்டுமே.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நான் ஒரு சோகமான கோமாளி.
    • நான் சரக்கடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் ஃபிரீ ரிலீஸ் விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மிஷ்கின் பேசியதாவது:-

    உண்மையில் ஒரு நல்ல படம் பார்த்தால், ஒரு வாரம் அந்த படத்தை பற்றி அலசி ஆராய்வதுதான் என்னுடைய வேலையாக இருக்கும். அதேபோல ஒரு மோசமான படத்தை பார்த்து விட்டால், அந்த ஒரு வாரம் முழுக்க எனக்கு காய்ச்சல் வந்தது போல இருக்கும்.

    ஆனால் வாழை படத்தை பார்த்த பிறகு, மாரியின் கிராப்ட்டை பார்த்து நான் அப்படி அதிர்ச்சியாகி நின்றேன். நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், வாழை படத்தை பாருங்கள்.

    நான் ஒரு சோகமான கோமாளி. ஆகையால் நான் கெட்ட வார்த்தைகளை பேசுவதை தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள். நான் மேடையில் பேசுவதை பார்த்து விட்டு, நான் சரக்கு அடித்து விட்டு பேசுகிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மையில் நான் சரக்கடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.

    நான் தற்போது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் முதலில் சிக்ஸ் பேக் கொண்ட டைரக்டராக நான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார்.
    • உங்களை நினைத்து பெருமையா இருக்கிறது.

    சென்னை:

    `பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில்'கர்ணன்' மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கினர்.

    மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது 'வாழை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலை சென்னையில் நடைபெற்ற வாழை படத்தின் Pre Release நிகழ்ச்சியில் வீடியோ மூலம் இயக்குநர் மணிரத்தனம் பேசியுள்ளார்.

    அதில் இயக்குநர் மணிரத்னம் கூறியதாவது:-

    மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குநர். தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார். மத்த படம் மாதிரி எல்லா துறையிலையும் இந்த படத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். உங்களை நினைத்து எனக்கு பெருமையா இருக்கு. இதில் எப்படி கிராம கதையில் இவ்வளோ பேரு இவ்வளோ நல்லா நடிக்க வச்சாருக்காரு தெரியல எனக்கு பொறாமையா இருக்கு. இதில் எல்லா கதாபாத்திரமும் அருமையா பண்ணிருக்காங்க, இது ஒரு தனி திறமை. இந்த படத்திற்கு என்னோட வாழ்த்துக்கள்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    ×