என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை  பின்னுக்குத் தள்ளிய ஷ்ரத்தா கபூர்.. காரணம் இதுதான்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளிய ஷ்ரத்தா கபூர்.. காரணம் இதுதான்!

    • இன்ஸ்டாகிராமில் 91.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் இருந்து வந்தார்.
    • கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்

    பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை விட அதிக ஃபாலோயர்களை பெற்று பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்திலும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 91.8 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவில் இவர்களுக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராமில் 91.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ஷ்ரத்தா கபூரின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 91.4 மில்லியன் அதிகரித்துள்ளது. இதனால் பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஷ்ரத்தா கபூர்.

    கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷ்ரத்தா கபூர் நடித்த 'ஸ்ட்ரீ 2' படம் வெளியாகி கவனம் ஈர்த்துவரும் நிலையில் ஒரே வாரத்தில் படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த படத்தின்மூலம் தற்போது அதிகம் பேசப்பட்டுவரும் ஷ்ரத்தா கபூரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையும் இதனாலேயே அதிகரித்துள்ளது.

    85.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் ஆலியா பட், 80.4 மில்லியன் ஃபாலோயர்களுடன் கத்ரினா கைஃப் மற்றும் 79.8 மில்லியன் ஃபாலோயர்களுடன் தீபிகா படுகோன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×