search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mariselvaraj"

    • உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ்.
    • கபடி விளையாட்டு பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமையவுள்ளது

    உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ். 2018-ஆம் ஆண்டில் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். மக்களிடையே மிகுந்த பாராட்டை இப்படம் குவித்தது.

    பெரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியையடுத்து, 2021-ல் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். அடுத்ததாக 'வாழை' என்ற படத்தை இயக்கினார். அப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்கவுள்ளார்.

    நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்கவுள்ளனர். பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். கபடி விளையாட்டு பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமையவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    "எனது 5-வது படத்தை நான் இயக்கவுள்ளேன் . மீண்டும் பா.ரஞ்சித் அண்ணாவுடன் இணைந்து பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக மாரி செல்வராஜ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • ’எதிர்நீச்சல்’ தொடரின் டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து காலமானார்.
    • இவர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    'எதிர்நீச்சல்' என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.


    நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை 'எதிர்நீச்சல்' தொடரின் டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கல் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குனர் மாரிசெல்வராஜ், நடிகர் மாரிமுத்து உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் 'மாமன்னன்'.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது.



    'மாமன்னன்' படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் 'வாழை' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், 'வாழை'படத்தை பார்த்து வியந்த உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.




    • 'மாமன்னன்' திரைப்படம் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


    மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.





    ×