மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்.. மாரிசெல்வராஜிடம் விருப்பம் தெரிவித்த உதயநிதி

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.இப்படம் விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது.
மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்.. மாரிசெல்வராஜிடம் விருப்பம் தெரிவித்த உதயநிதி
Published on

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் 'மாமன்னன்'.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது.

'மாமன்னன்' படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் 'வாழை' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், 'வாழை'படத்தை பார்த்து வியந்த உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com