போகுமிடம் வெகுதூரமில்லை - இவங்களுக்கு மட்டும் இலவச டிக்கெட் படக்குழு அறிவிப்பு

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை'இப்படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
போகுமிடம் வெகுதூரமில்லை - இவங்களுக்கு மட்டும் இலவச டிக்கெட் படக்குழு அறிவிப்பு
Published on

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளனர். அதில் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கு மட்டும் டிக்கெட் இலவசம் முதல் நாள் மட்டும் என அறிவிப்பை அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com