என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilavuku En Mel Ennadi Kobam"

    • ராயனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

    இப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது இரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலுக்கான ஃபைனல் மிக்சிங் முடிவடைந்தது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்ன்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

    இப்பாடலுக்கும், இப்படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்.
    • பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார்

    நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே  கலவையான விமர்சனங்களை பெற்றத. இருப்பினும் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

    இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்.

    பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 90 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது. இதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×