கோட் படத்தின் புது அப்டேட் கொடுத்த பிரசாந்த்

கோட் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.கோட் திரைப்படம் 3 மணிநேரம் ஓடும்.
கோட் படத்தின் புது அப்டேட் கொடுத்த பிரசாந்த்
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `கோட்' (Greatest of all time) திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது.

இந்நிலையில், படம் ஓடும் நேரம் குறித்து நடிகர் பிரசாந்த், `கோட் படம் 179 நிமிடங்கள் ஓடும் முழு நீளப்படம். கிட்டத்தட்ட மூன்று மணிநேர படம். இந்த திரைப்படத்தில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளது. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம் உள்ளது. இது முழு நீளப்படமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படாத வகையில் இருக்கும்' என்று கூறியுள்ளார்.

மேலும் கோட் திரைப்படம் கர்நாடகா மற்றும் கேரளாவில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 7 மணிக்கு வெளியாகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

X

Maalai Malar
www.maalaimalar.com