என் மலர்
சினிமா செய்திகள்

வேதாளம் படப்பிடிப்பின்போது 'தல' அஜித் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த யோகிபாபு
- அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
- வேதாளம் படிப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை யோகிபாபு பகிர்ந்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் தங்கையாக லட்சுமி மேனனும் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் தெலுங்கில் கூட சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வேதாளம் படிப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை நடிகர் யோகிபாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபுவை நடிகர் அஜித்குமார் புகைப்படம் எடுக்கும் போட்டோ தான் அது. இந்த புகைப்படம் தான் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Next Story






