என் மலர்
நீங்கள் தேடியது "சார்"
- மக்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டு வெற்றி பெறலாம் என கணக்கு போடுகிறார்கள்
- அ.தி.மு.க. தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் நடைமுறைப்படுத்தப் போவதாகத் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உள்ளது. S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாகத் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் அதே குறுக்குவழியைப் பின்பற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தியா கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாகத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டு வெற்றி பெறலாம் எனப் போடுகின்ற கணக்கு என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்புக்கணக்காகத்தான் ஆகும்.
S.I.R. முறையைக் கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை தி.மு.கழகத்திற்கு உண்டு.
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்த இயக்கம்தான் தி.மு.கழகம். நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிலும் எடுத்துச் சொல்லி, கழக அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் என்னென்ன பயன்களைப் பெற்றுள்ளன என்பதை உறுதி செய்து, தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் துரோகத்தையும் மீறி - மாநில அரசின் திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றி - தமிழ்நாடு தலைகுனியாது என்பதை நிலைநாட்டி, மாநில உரிமைகளுக்காகப் போராடும் தி.மு.க. அரசு தொடர்ந்திட- மக்களின் ஆதரவைப் பெற்று, இரண்டரை கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைத்தவர்கள் கழகத்தின் ரத்தநாளங்களான உடன்பிறப்புகள். அதற்காக என் மனமார்ந்த நன்றியை அப்போதும் தெரிவித்தேன். இப்போது மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். களத்தில் நமக்கான பணிகள் முடிவடையவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது.
என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக, 28-10-2025 அன்று காலையில் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் பயிற்சிக் கூட்டம் நடத்தப்படவிருக்கிறது.
'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' என்ற இலக்குடன் கழக உடன்பிறப்புகள் களப்பணியாற்றுவதற்கான இந்தப் பயிற்சிக் கூட்டம், முதன்மை உடன்பிறப்பான, உங்களில் ஒருவனான எனது தலைமையில் நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகிக்கும் இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் கழக மாவட்டச் செயலாளர்கள், கழகத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர – ஒன்றிய – நகர – பகுதி -பேரூர்க் கழகச் செயலாளர்கள் பங்கேற்றுப் பயிற்சி பெற இருக்கிறார்கள்.
இந்தப் பயிற்சிக்கூட்டத்திற்குப் பிறகு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞரணி, பாக மகளிரணி, பாகத்திற்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' என்பதை முன்னெடுக்க வேண்டும். மாநில நிர்வாகியாக இருந்தாலும் கூட அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும்.
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R. செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கழகத்தினர் கடமையாற்ற வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும்தான்.
என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என ஒவ்வொரு கழக உடன்பிறப்பும், உறுதியேற்று, களப்பணியாற்றினால், எல்லா வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-இல் ஏழாவது முறையாக கழக ஆட்சி அமைவது உறுதியாகிவிடும். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது. தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள். அந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும்தான் மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சிக் கூட்டத்தில் உங்களைச் சந்திக்க வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட்.
- முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.
தற்பொழுது விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலமை நிலவி வருகிறது. கீழ்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணியளவில் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
- கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக்க அறிமுகமாகினார்.
தற்பொழுது அவர் விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலைமை நிலவி வருகிறது. கீழ்த்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் டீசர் உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
- இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார்.
தற்பொழுது அவர் விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாடலான 'பனங்கருக்கா' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் . படத்தின் அடுத்த பாடலான பூவாசனை பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார். இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். தற்பொழுது அவர் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விமலுக்கு கேக் வெட்டி படக்குழு கொண்டாடினர். இதையொட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விமல் நடிப்பில் சார் என்ற படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார்.
- வெற்றிமாறன் ‘சார்’ படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். தற்பொழுது அவர் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் வெற்றிமாறன் 'சார்' படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.
முன்னதாக, விடுதலை 2' படத்தின் BTS புகைப்படத்தை பகிர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடிகை மஞ்சு வாரியர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது.
போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு படக்குழு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஆசிரியர் என்ற வார்த்தை அர்த்தத்தையும் ஆசிரியரின் மேன்மையும் கூறியுள்ளனர்.
திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது.
- சார் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சார் திரைப்படம் வருகின்ற 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சார் படம் அக்டோபர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சிறப்பான படமாக இப்படம் உருவாகியுள்ளது.
சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குநராகவும் அறியப்பட்டார். இதைத் தொடர்ந்து 'சார்' என்ற படத்தை இயக்கினார். இதில் விமல் நாயகனாகவும் சாயாதேவி நாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர். வில்லன் கதாபாத்திரத்தில் சிராஜ் நடித்து இருந்தார்.
இனியன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு, ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்ய, சித்து குமார் இசையமைக்க மற்றும் கலை பணிகளை பாரதி ஆகியோர் செய்திருந்தனர்..
எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிட்டது.
இந்த படம் அக்டோபர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பரம்பரையின் அர்ப்பணிப்பை அழகான பாடமாக உணர்த்தியது.
இப்படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதளவில் பாராட்டினர். மேலும் மக்களிடையே இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன.
மேலும் 'நாம் தமிழர் கட்சி' சீமான் மற்றும் 'விடுதலை சிறுத்தைகள் கட்சி' திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி இருந்தனர். குறிப்பாக கல்வியால் தான் எளிய மக்கள் மேம்பட முடியும் என்பதை பேசுகின்ற ஒரு திரைப்படம் என வாழ்த்தினர்.
இந்த நிலையில் இந்த படம் தற்போது அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் பார்க்காத பலரும் தற்போது ஓடிடி தளங்களில் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






