'சார்' படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வெற்றிமாறன்: மஞ்சு வாரியர் வாழ்த்து

விமல் நடிப்பில் சார் என்ற படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார்.வெற்றிமாறன் ‘சார்’ படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
vetrimaran
Published on

சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். தற்பொழுது அவர் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் வெற்றிமாறன் 'சார்' படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

முன்னதாக, விடுதலை 2' படத்தின் BTS புகைப்படத்தை பகிர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடிகை மஞ்சு வாரியர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com