ஷான் ரோல்டன் குரலில் சார் படத்தின் அடுத்த பாடல் வெளியானது

மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஷான் ரோல்டன் குரலில் சார் படத்தின் அடுத்த பாடல் வெளியானது
Published on

சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார்.

தற்பொழுது அவர் விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.

படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாடலான 'பனங்கருக்கா' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் . படத்தின் அடுத்த பாடலான பூவாசனை பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார். இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com