பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களின் ஆணுறுப்பை அறுக்க வேண்டும் - நடிகை சனம் ஷெட்டி

மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என யார் கியாரண்டி கொடுப்பார்.சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் வாழ்கிறோம்.
Sanam Shetty
Published on

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை தரக்கோரியும் நடிகை சனம் ஷெட்டி தனியார் அமைப்புடன் இணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார்.

போராட்டத்தில் பேசிய அவர், "நான் நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகளை மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட சொல்கிறார்கள். இந்த சமூகத்தில் தான் நானும் வாழ்கிறேன். நாளைக்கு என் வீட்டில் கூட இது போன்ற விஷயங்கள் நடந்தால் அப்போதும் எப்படி பொழுது போக்கிற்கான பதிவுகளை பகிர முடியும். இதனால் சினிமா வாய்ப்பு கூட போனால் போகட்டும். பரவாயில்லை. எது போனாலும் நான் பேசுவேன்.

மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என யார் கியாரண்டி கொடுப்பார். ஹேமா அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் வாழ்கிறோம். இதில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. அதனால் இப்போது இருக்கும் தண்டனை போதாது. பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களின் ஆணுறுப்பை அறுக்க வேண்டும். அதை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனை வரக்கூடாது.

ஆணுறுப்பை வெட்டி வீசினால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க முடியும். நாட்டில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இருக்காது என்பதை உறுதி செய்ய முடியுமா? நீதிமன்றம், காவல்துறை, சட்டங்கள் எல்லாம் எதற்கு?"

தமிழ்நாட்டில் 6 வயது 10 வயது குழந்தைகளுக்கு கூட பாலியல் வன்கொடுமை நடக்குது. ஒருத்தனுக்கு நாம கொடுக்குற தண்டனையை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனை வரக்கூடாது" என்று ஆவேசமாக பேசினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com