என் மலர்
நீங்கள் தேடியது "actor vikram"
- சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
- பிரேம்குமார் 96 பாகம் இரண்டு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியனார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது.
அடுத்ததாக பிரேம்குமார் 96 பாகம் இரண்டு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இயக்குனர் பிரமே் குமார் நடிகர் விக்ரமிடம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேம் குமார், தான் அடுத்து எடுக்க இருக்கும் படத்தின் கதை குறித்து விக்ரமிடம் கூறியிருக்கிறார்.
இதனால், பிரேம் குமார்- விக்ரம் கூட்டணியில் புதிய படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
- திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
- ரியலிஸ்டிக் மற்றும் மாஸ் இரண்டையும் கலந்து புதிதாக எடுத்துள்ளார்.
ஈரோடு:
நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. இதையொட்டி நடிகர் விக்ரம், படத்தின் இயக்குனர் அருண்குமார் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள திரையரங்கில் வீர தீர சூரன் படம் திரையிடப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மாலை நடிகர் விக்ரம், இயக்குனர் அருண்குமார் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்து பேசினர்.

பின்னர் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திரையரங்கில் வீர தீர சூரன் படத்தின் காட்சிகள் அதிகப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து இடங்களில் மக்களின் ஆதரவு இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இதற்கு தான் படம் எடுத்தோம்.
வீர தீர சூரன் படத்தின் பகுதி ஒன்று விரைவில் வரும். இயக்குனர் ரியலிஸ்டிக் மற்றும் மாஸ் இரண்டையும் கலந்து புதிதாக எடுத்துள்ளார். ரசிகர்களுக்காக எடுத்த இந்த படம் இந்தளவிற்கு மக்களிடையே சென்றடைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுடன் நடிகர் விக்ரம் உரையாடினார்.இதில், ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என்றார். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் தெரிவித்து படம் எப்படி இருந்தது எனக்கேட்டார்.
ரசிகர்கள் "ஐ லவ் யூ" எனக் கூறியதற்கு, விக்ரமும் "ஐ லவ் யூ" என்றார். தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து ஒரு பூவை எடுத்து ரசிகருக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
அப்போது கூட்டத்தில் ஒரு ரசிகர் நடிகர் விக்ரமனை நோக்கி உங்களைப் போன்று வயசாகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து பேசிய விக்ரம், வயதாவது நல்லது தான்.
வயசாகாமல் இருக்க சனிக்கிழமை தோறும் கழுதை பால் குடிக்க வேண்டும் என நகைச்சுவையாக பதில் அளித்தார். இதைக்கேட்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து சாமி, அந்நியன் பட வசனத்தை ரசிகர்களிடம் பேசி விக்ரம் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
- நடிகர் விக்ரமின் மேலாளர் யுவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
- கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் நிதியுதவி.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.
அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விக்ரம், நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சத்தை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் விக்ரமின் மேலாளர் யுவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 200 பேர் இறந்தனர், 197 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணவில்லை என்ற சோகமான செய்தியால் வேதனையடைந்தேன். நடிகர் விக்ரம் இன்று கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (sic) ரூ.20 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விக்ரம் கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
- மணி சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் உள்ளிட்டோர் நடித்த பாம்பே படம் கடந்த 1995-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் தேர்வானாவர் நடிகர் விக்ரம்தான். படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் அவர் நடித்து வந்த விக்ரமனின் புதிய மன்னர்கள் படத்திற்காக தாடி வளர்த்திருந்திருக்கிறார் விக்ரம். மணிரத்னமோ தாடியையும், மீசையையும் ஷேவ் செய்யச் சொன்னாராம். அது மட்டும் முடியாது சார் என்று கூறி படத்தில் இருந்து விலகிவிட்டாராம் விக்ரம்.
இறுதியில் அந்த கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மணி சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. அந்த படத்தை இழந்த பிறகு 2 மாதங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் படத்தை இழந்ததை நினைத்து அழுவேன். அதன்பிறகு மணிரத்தினம் சார் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று சபதம் போட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

முதலில் பம்பாய் படத்தில் நடிக்க முடியாமல் போனாலும், மணிரத்னத்துடன் பணிபுரியும் விக்ரமின் கனவு இறுதியில் நனவாகியது. அவர் மணிரத்னம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான ராவணன் திரைப்படத்தில் ராவணனாக நடித்தார். பொன்னியின் செல்வன்: I மற்றும் II-ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






