என் மலர்
சினிமா செய்திகள்
- நானி நடிப்பில் சூர்யாஸ் சாட்டர்டே படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
- நானியின் 32 படத்தை குறித்து தற்பொழுது படக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி.
நானி நடிப்பில் சூர்யாஸ் சாட்டர்டே என்ற படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் இதுவரை உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து நானி அடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். கோர்ட் என்ற படத்திலும் மற்றும் நானியின் 32- படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நானியின் 32 படத்தை குறித்து தற்பொழுது படக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். படத்தின் புதிய அறிவிப்பை செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். போஸ்டரில் ரத்தம் படிந்த கை கார் ஸ்டீரிங்ல் இருக்கிறது. ஹான் தோ என்ற வாக்கியம் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அடுத்ததாக `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
- கடைசி உலகப் போர் திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஹிப்ஹாப் தமிழா கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது.
அடுத்ததாக `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியானது.
படத்தின் ப்ரோமோ பாடலான பூம்பாஸ்டிக் என்ற பாடலின் வீடியோ படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடல் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.
இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் மேக்கிங் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் கதாப்பாத்திரத்தை பற்றியும், படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி கூறியுள்ளனர். படக்குழு மிகப் பெரியளவில் முயற்சியையும் , கடின உழைப்பை செலுத்தியுள்ளனர்.
இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர்.
கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தில் வைபவின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்தின் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரவ் மற்றும் இஸ்மத் பானு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் வெப்பம் குளிர் மழை நடித்து இருந்தனர்.
- படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் அறிமுக இயக்குனரான பாஸ்கல் வெப்பம் குளிர் மழை படத்தை இயக்கினார். FDFS நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில், திரவ் மற்றும் இஸ்மத் பானு ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். திரைப்படம் வெளியாகி மக்களிடையேவும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து திரவ் அடுத்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை FDFS தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். படத்திற்கு டோபமைன்@ 2.22 என தலைப்பிட்டுள்ளனர். போஸ்டரில் மொபைல் போனால் ஏற்படும் சிக்கலை குறித்த கதைப் போல் வடிவம் செய்யப்பட்டுள்ளது.
இப்படம் 7 வெவ்வேறு சூழலில் இருந்த வந்த நபர்கள் அவர்களின் வாழ்க்கை ஒரு நடக்கப் போகிற கொலையில் ஒன்று சேர்வது போலவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என படக்குழு கூறியுள்ளது.
படத்தில் திரவ், விஜய் டியூக், விபிதா, நிகிலா சங்கர், சத்யா, மற்றும் பலர் நடித்துள்ளனர். திரவ் இயக்கும் இப்படத்திற்கு அவரே படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளார். மொத்த படமும் சென்னையை சுற்றி 20 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை குறித்து மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹிந்தியில் ஷாருக் கான், விஜய் சேதுபதியை வைத்து அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டியது
- இரண்டு ஹீரோ சப்ஜக்ட்டாக இந்த படத்தை அட்லீ உருவாக்க உள்ளார்
'ராஜா ராணி' மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்று விஜய்யின் 'தெறி'- 'மெர்சல்'- 'பிகில்' படங்களை இயங்கி தொடர் ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லீ. கடைசியாக ஹிந்தியில் ஷாருக் கான், விஜய் சேதுபதியை வைத்து அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இடையில் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ படம் இயக்க உள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால் சம்பள பிரச்சனை காரணமாக அந்த படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் பான் இந்தியா ஆக்சன் என்டர்டெயினர் படம் ஒன்றை அட்லீ இயக்க உள்ளதாகவும் அதில் ஹிந்தியில் முன்னணி நடிகராக வளம் வரும் சல்மான் கான் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
சல்மான் கானுக்கு அட்லீயின் கதை பிடித்துப்போகவே அவர் படத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம். இரண்டு ஹீரோ சப்ஜக்ட்டாக இந்த படத்தை அட்லீ உருவாக்க உள்ள நிலையில் சல்மான் கானோடு கமல் ஹாசன் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் அடுத்த வருடம் [2025] ஜனவரி மாதமே படப்பிடிப்பை அட்லீ தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பிரபாஸின் 'கல்கி 2898 AD' படத்தில் அமிதாப் பச்சனுடம் முக்கிய தோற்றத்தில் கமல் மல்டி ஸ்டார் சபிஜக்டில் நடித்துள்ள நிலையில் இந்த படத்துக்கும் கமல் ஓகே சொல்வார் என்றே கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'சிக்கந்தர்' படத்தில் சல்மான் கான் நடித்து வருவது குறிப்பிடத்தத்க்து.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.
- சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
படப்படிப்பு தளம் மற்றும் படப்பிடிப்புக்காக ஓட்டலில் தங்கியிருந்தபோது பல நடிகைகள் சந்தித்த பாலியல் பிரச்சினைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் பல நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களால் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.
இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து திரையுலகத்தினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகைகள் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.

அதன்பேரில் நடிகர்கள் முகேஷ், சித்திக், மணியன் பிள்ளை ராஜூ, ஜெயசூர்யா, எடவேள பாபு இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர்.
அந்த வழக்கில் இருந்து தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் முகேஷ், காங்கிரஸ் நிர்வாகி வி.எஸ். சந்திரசேகரன், நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜூ, எடவள பாபு ஆகியோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அதேபோன்று நடிகர் சித்திக்கும் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நடிகை ஒருவரின் புகாரின் பேரில் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார், அவர் மீது கற்பழிப்பு (376), கொலைமிரட்டல் (506) உள்ளிட்ட ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தீபிகா படுகோனே தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார்.
- தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இந்த மாதம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர்.
இந்தி திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார். அவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த மாத இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இந்த மாதம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர்.
நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும் தீபிகா படுகோனே தற்போது போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
தீபிகா கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சினிமா துறையை பொறுத்தவரை பாலியல் தொடர்பான பிரச்சனை இல்லாத காலக் கட்டங்களே இல்லை.
- குற்றம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும்.
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பாலியல் விவகாரம் குறித்து ஹேமா கமிட்டியில் உறுப்பினராக இருந்தவரும், மூத்த நடிகையுமான சாரதா கூறியதாவது:-
மலையாள திரையுலகம் மட்டுமின்றி சினிமா துறையை பொறுத்தவரை பாலியல் தொடர்பான பிரச்சனை இல்லாத காலக் கட்டங்களே இல்லை. எனது காலக்கட்டத்தில் இதுபோன்ற பிரச்சனைகளில் நடிகைகள் மவுனம் காத்தனர். அவமானம், பயம், எதிர்காலம் குறித்தான சிந்தை காரணமாக பலரும் தமக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே சொல்லாமல் மவுனம் காத்தனர். கல்வி அறிவில் சிறந்த தற்போதைய தலைமுறைக்கு அவர்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல எந்த பயமும் இல்லை. ஆனால் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து நடிகர்களுக்கு எதிராக தற்போது நடிகைகள் வெளியிட்டு வரும் குற்றச்சாட்டுகள் வெறும் ஷோ மட்டுமே. சிலர் கூறுவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. தற்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரே விஷயம் வயநாடு பேரிடர் பற்றி மட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மலையாளத்தில் மூத்த நடிகையான ஷீலா கூறியதாவது:-
நடிகைகள் தாங்கள் சந்தித்து வரும் மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக கூற முன் வரவேண்டும். எனக்கு அதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை. ஆனால் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் நடந்த மோசமான அனுபவங்கள் குறித்து சக நடிகைகள் கூறி இருக்கிறார்கள். அன்றைய காலக்கட்டத்தில் இதுபோல் வெளிப்படையாக கூற வேண்டிய வாய்ப்பு, தேவைகள் இல்லாமல் இருந்தது. எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்களது பெயர்களை மட்டும் குறிப்பிடுவது ஏன்? என்று தெரியவில்லை.
குற்றம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். திரைப்பட துறையில் பெண்களுக்காக எத்தனையோ நல்ல செயல்களை நடிகைகளின் பெண்கள் அமைப்பினர் செய்து வருகிறார்கள், அவர்களை பாராட்டுகிறேன். ஹேமா கமிட்டியை அமைத்து, நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக பேச வாய்ப்பு தந்த அரசுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார்.
- இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகயுள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் 3 வது பாடலான டாவுடி பாடல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகப்போவதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது.
- படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளனர்.
ஹிப்ஹாப் ஆதி இன்றைய இளம் சமூதாயத்திற்கு பிடித்தமான இசையமைப்பாளராவர். அவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இசையமைப்பது மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது.
தற்பொழுது அடுத்ததாக `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியானது.
படத்தின் ப்ரோமோ பாடலான பூம்பாஸ்டிக் என்ற பாடலின் வீடியோ படக்குழுவினர் வெளியிட்டனர். பாடல் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.
இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு ஃபிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.
நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
படத்திற்கு "Bloody Beggar" என தலைப்பிடப்பட்டுள்ளது. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி படக்குழு தற்போழுது அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவியின் பிரதர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம்.
- ரஜினிகாந்த் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் " மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான. தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு.
மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சப்பிடவில்லையே என்று கதறும் போது. நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்" என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






