என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சுரேஷ், நதியா நடிப்பில் 'பூக்களை பறிக்காதீர்கள்', விஜயகாந்த், நதியா நடித்த 'பூ மழை பொழியுது' படங்களை தயாரித்துள்ளார்.
    • நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு', அஜித் நடித்த 'ஆழ்வார்', சூர்யா நடித்த 'வேல்', விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.

    தயாரிப்பாளர் மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

    ஸ்ரீ ராஜகாளியம்மன் முவீஸில் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தயாரித்த படங்கள்,

    சுரேஷ், நதியா நடிப்பில் 'பூக்களை பறிக்காதீர்கள்', விஜயகாந்த், நதியா நடித்த 'பூ மழை பொழியுது', சுரேஷ், நதியா நடித்த 'இனிய உறவு பூத்தது', பிரபு, ரூபிணி நடித்த 'என் தங்கச்சி படிச்சவ', பிரபு, கௌதமி நடித்த 'பிள்ளைக்காக', அர்ஜுன், ரூபினி நடித்த 'எங்க அண்ணன் வரட்டும்', சத்யராஜ், கௌதமி நடித்த 'வேலை கிடைச்சிருச்சு' , அம்பரீஷ், மாலா ஸ்ரீ நடித்த 'ரவுடி எம்எல்ஏ' (கன்னடம்),

    பிரபு, குஷ்பூ நடித்த 'கிழக்குக்கரை', அருண் பாண்டியன், சுகன்யா நடித்த 'கோட்டைவாசல்', சரத்குமார், கனகா நடித்த 'சாமுண்டி', பிரபு, குஷ்பூ நடித்த 'மறவன்', விஜயகாந்த், வினிதா நடித்த 'பதவி பிரமாணம்', ரவிச்சந்திரன், ரம்யா கிருஷ்ணன் நடித்த 'சினேகா' (கன்னடம்) ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

     

    இந்நிலையில் தயாரிப்பாளர் மோகன் நடராஜனுக்கு நடிகர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மோகன் நடராஜன் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 4½ வருடங்களாக அறிக்கையை மறைத்து வைத்தது ஏன்?
    • மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழில் தவமாய் தவமிகுந்து, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் நடிகை பத்மபிரியா. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் கொச்சியில் பிரபல மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட சினிமா பெண்கள் கூட்டு அமைப்பை உருவாக்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.

    இந்த அமைப்பில் இருந்த பத்மபிரியா, ரேவதி, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகள் நேரில் சென்று முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் அளித்த கோரிக்கையை ஏற்று அப்போது அமைக்கப்பட்டதுதான் இந்த ஹேமா கமிட்டி ஆகும்.

    இந்த நிலையில் நடிகை பத்மபிரியா ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 4½ வருடங்களுக்கு மேலாக அந்த அறிக்கையை மறைத்து வைத்தது ஏன்? யாருக்காக வெளியிடாமல் மவுனம் காக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    பாலியல் விவகாரத்தில் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்த மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும், முதுகெலும்பும் கிடையாது. அனைவரும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு உள்ளனர்.

    மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது. யார் மறுத்தாலும் அதுதான் உண்மை. தங்கள் கைகளில் அதிகாரம் இருப்பதால்தான் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக யாரும் வாயைத் திறக்க மறுக்கின்றனர்.

    தற்போது ஏற்பட்டுள்ள விவகாரத்தை ஒரு பாலியல் பிரச்சனையாக மட்டுமே சினிமா துறையினர், பொதுமக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு நடிகைகள் அனைவரும் ஒரு சரக்கு மட்டுமே.

    எனக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் திடீரென குறைந்து விட்டது. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு 26 வயது இருக்கும்போது வயதாகி விட்டதே, நடிப்பதை நிறுத்தக் கூடாதா? என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கேட்டது எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

    அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பியாவார் ஆகாஷ் முரளி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    இந்நிலையில் படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். படத்தின் டீசர் அனைத்து திரையரங்குகளிலும் 5 ஆம் தேதி திரையிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர்களுக்கே பொருளாதார ரீதியில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது.
    • நாடகத்தின் நிலை இன்னமும் மோசம், அவர்களுக்கு ஒரு வைராக்கியம் உண்டு.

    விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.

    இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, நடிகர் சௌந்தரராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் மறைந்த விஜே ஆனந்த கண்ணன் மனைவி ராணி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நடிகர் சௌந்தரராஜா பேசும் போது, "நான் நாடகங்களை பார்த்து வளர்ந்தவன். நான் நாடகம் நடிக்க ஆசைப்பட்டவன். ஆனால், என்னால் அப்படி ஆக முடியவில்லை. அதற்கான பயிற்சியை நான் முறையாக எடுக்கவில்லை. அப்படியே சென்றுவிட்டது."

    "இந்த காலத்தில் நடிகர்களுக்கே பொருளாதார ரீதியில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் நாடகத்தின் நிலை இன்னமும் மோசம், அவர்களுக்கு ஒரு வைராக்கியம் உண்டு. அதை சொல்லும் போதே எனக்கு புல்லரிக்கிறது. கதையில் முக்கியத்துவம் இருக்கிறதா, வசனம் இருக்கிறதா என கேட்டு, அப்படி இருந்தால் மட்டும் தான் ஒப்புக்கொள்வார்கள். அந்த தைரியம் உண்மையில் பாராட்டுக்குரியது," என்று தெரிவித்தார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அண்மையில் நகுல் நடிப்பில் வெளியானது வாஸ்கோடகாமா திரைப்படம்.
    • ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

    தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அண்மையில் நகுல் நடிப்பில் வெளியானது வாஸ்கோடகாமா திரைப்படம். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில்  வெளியானது.

    அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். படத்தின் ஓடிடி ரிலிஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகவுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகிறது. அமேசான் பிரைமிலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • இதனை தற்பொழுது மறுத்து நிவின் பாலி மறுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தற்பொழுது மறுத்து நிவின் பாலி மறுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " நான் என் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை கேள்விப் பட்டேன். இது முற்றிலும் பொய்யானது. நான் என் மீது உள்ள நியாயத்தை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். உண்மையான குற்றவாளியை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். மத்ததெல்லாம் சட்ட ரீதியாக கையாளப்படும்" என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் இளையராஜா.
    • இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.

    இசைஞானி இளையராஜா லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு ரெயில் பயணம் மேற்கொள்ளும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில் 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

    தமிழ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக இருந்த இளையராஜா தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

    இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க நடிகர் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய படம் தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், தி கோட் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    ரசிகர்கள் இந்த படத்திற்கான டிக்கெட் எடுப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தி கோட் படம் குறித்த புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்திய தேசிய அணி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சுப்ரமனியம் பத்ரிநாத்- தி கோட் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார்.

    இதனை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அதில், கோட் படத்தில் எனது பங்கை செய்துள்ளேன். முதல் முறையாக படத்தில் அங்கம் வகிக்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. ரிவ்யூ மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கனமழைக்கு ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.
    • இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால் வீடுகள், பயிர்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கனமழைக்கு ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.

    தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கடந்த 3 நாட்களாக இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால் வீடுகள், பயிர்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவுள்ளதாக நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான பாலய்யா அறிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடை வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்திருந்தார்.

    • இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

    'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.

    உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

    2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இப்படம் படப்பிடிப்பு முடிந்தும் வெளியாகாமல் இருந்து வந்தது. அண்மையில் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளியான கருடன் படம் வெற்றி அடைந்ததை அடுத்து, நந்தன் படமும் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    படத்தை பார்த்த நடிகர் சூரி பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ' படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது - நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை!

    அன்பு இரா.சரவணன் அண்ணனுக்கும், சசிகுமார் அண்ணனுக்கும், ஜிப்ரான் தம்பிக்கும். நந்தன் குழுவினர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

    பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மலையாள பிரபல நடிகர்களுக்கு அடுத்தடுத்து விழும் பாலியல் குற்றச்சாட்டால். மலையாள திரையுலகமும், ரசிகர்கள் மற்றும் மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் பேட்ட ராப்
    • படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது பகீரா திரைப்படம்.

    இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

    புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள டான்ஸ் டான்ஸ் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

    இப்பாடலில் பிரபு தேவா சண்டை செய்துக்கொண்டே நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×