என் மலர்
சினிமா செய்திகள்
- எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது.
- எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நடப்பது உங்களுக்கு தெரியும்.
தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் SAM-GSICC கமிட்டி சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது.
இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் திருகர் நாம் பவுண்டேஷன் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது, ஏன் சினிமா மீது மட்டும் பழி போடுகின்றீர்கள்? ஏன் யாரும் அதைப் பற்றி மட்டும் பேச மறுக்கின்றனீர்கள்?"
"ஐடி துறை, மற்ற துறைகளான மருத்துவம், கல்வித்துறை, அரசியல் என எங்கும் நடக்கவில்லையா? எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நடப்பது உங்களுக்கு தெரியும். அப்புறம் ஏன் சினிமாவை மட்டும் பிடித்துக் கொள்கின்றீர்கள்? எல்லா துறைகளிலும் கமிட்டி இருக்கனும்னு சொல்லுங்க நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை," என்று தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பட்டியல்:
பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் 1 குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விடுக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும். மேலும் கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இமெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும், நேரடியாக மீடியாகளில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்.
- இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
- இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் 3 வது பாடலான தாவூதி வீடியோ பாடல் இன்று வெளியாகியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
துள்ளல் இசையுடன் ஜூனியர் என்.டி.ஆரும் ஜான்வி கபூரும் இணைந்து சிறப்பான நடனத்தை இப்பாடலுக்கு கொடுத்துள்ளனர். இப்பாடல் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விமல் நடிப்பில் சார் என்ற படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார்.
- வெற்றிமாறன் ‘சார்’ படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். தற்பொழுது அவர் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் வெற்றிமாறன் 'சார்' படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.
முன்னதாக, விடுதலை 2' படத்தின் BTS புகைப்படத்தை பகிர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடிகை மஞ்சு வாரியர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் குறித்து தகவல்.
- நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், சமீபத்தில் அவர் விலகுவதாக அறிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
"சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
7 சீசனுக்கு பிறகு, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
- விஜய்யுடன் பைக்கில் அமர்ந்திருப்பதுபோல எடிட் செய்து தரும் AI இணையதளத்தை கோட் படக்குழு அறிமுகம் செய்தது.
- விஜய்யுடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) வெளியாகவுள்ளது.
நடிகர் விஜயுடன் பைக்கில் அமர்ந்திருப்பதுபோல எடிட் செய்து தரும் AI இணையதளத்தை தி கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்தது.
agsentertainment.heyareweare.com இணையதளத்தில் தங்கள் புகைப்படத்தை பதிவேற்றி, விஜய்யுடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தி கோட் திரைப்படம் நாளை வெளியாவதை ஒட்டி, இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
- தி கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாளை (செப்டம்பர் 5) வெளியாகி இருக்கும் தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், தி கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்தது.
இதைத் தொடர்ந்து விஜய்யின் "தி கோட்" பட சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தி கோட் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து காலை 9 மணி காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் தங்கலான் படத்தை திருமாவளவன் பார்த்தார்.
- தங்கலான் திரைப்படம் உழைப்பின் மேன்மையை உணர்த்துகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தை விசிக தலைவர் திருமாவளவன் பார்த்துவிட்டு மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று அவரை பாராட்டியிருந்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், "போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு! வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும் வரலாற்றுக் குறிப்பு. விபத்தில்தான் பலி என்றாலும், இது வெண்மணி வெங்கொடுமையின் வேறொரு வடிவம்" என்று தெரிவித்திருந்தார்.
வாழை படத்தை பாராட்டிய திருமாவளவன் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வெளியான பா ரஞ்சித்தின் தங்களின் படத்தை ஏன் பாராட்டவில்லை என்று விமர்சனம் எழுந்தது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "வாழை' படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்ததால், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். 'தங்கலான்' படத்தை பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் தங்கலான் படத்தை திருமாவளவன் பார்த்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணன் புகழேந்தி அவர்களோடு தங்கலான் திரைப்படம் காணும் வாய்ப்பு இன்று கிடைத்தது. தங்கலான் திரைப்படம் உழைப்பின் மேன்மையை உணர்த்துகிறது. சாதி வர்ணம் போன்ற்வற்றால் அடிமைப்பட்டு கிடந்த மக்களை விடுவிப்பதற்கு தங்களின் இருப்பிடத்திலிருந்து வெளியேறி கோலார் பகுதியில் புதைந்து கிடைக்கும் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியை தங்கலான் தலைமை தாங்கி மேற்கொள்கிறார்.
அதில் அந்த மக்கள் சந்திக்கிற அவலங்களை வெளிப்படுத்தும் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. ஒருபுறம் நிலக்கிழார்கள் செய்கிற கொடுமை இன்னொருபுறம் பிரிட்டிசார் செய்கிற அடக்குமுறை, இவற்றை எல்லாம் தாண்டி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த உழைக்கும் மக்கள் மேற்கொண்ட இந்த கடுமையான தங்கம் வெட்டி எடுக்கிற பணியை இந்த திரைப்படம் உணர்த்துகிறது.
இயக்குநர் பா ரஞ்சித் அவருக்கே உரிய பாணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். புனைவுகள் கலந்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை தருகிறது" என்று தெரிவித்தார்.
- தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- தி கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாளை (செப்டம்பர் 5) வெளியாகி இருக்கும் தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், தி கோட் படத்திற்கு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ ஆகியோர் கூட்டாக இணைந்து வாழ்த்து தெரிவித்து உள்ளனற்.
இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தி கோட் படத்திற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. இந்த படம் வெற்றி பெற இயக்குநர் வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் புரொடக்ஷன், அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களது பாய்ஸ் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ," என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில வெள்ளத்திற்கு அல்லு அர்ஜுன் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்தார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். , அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) வெளியாகவுள்ளது.
- TESLA தமிழ்நாட்டுக்கு வந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் GOAT நகர்வாக அது இருக்கும்.
விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் ஏஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "இந்த AI புகைப்படம் உண்மையாக வேண்டும் என விரும்புகிறேன். TESLA தமிழ்நாட்டுக்கு வந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் GOAT நகர்வாக அது இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த எக்ஸ் பதிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை வெங்கட் பிரபு டேக் செய்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
- பிகில் படக்கதை திருட்டு தொடர்பான வழக்கில் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
நடிகர் விஜய் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் பிகில். இதனை இயக்குநர் அட்லீ இயக்கி இருந்தார். இந்தப் படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
பிகில் படத்தின் கதையை தன்னுடையது என்றும், தனது கதையை பயன்படுத்தியதற்காக 10 லட்ச ரூபாய் வழங்க இயக்குனர் அட்லீ, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய் நடித்த பிகில் படக்கதை திருட்டு தொடர்பான வழக்கில் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தனது கதை என அம்ஜத் மீரான் 2019-ல் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹேமா கமிட்டி விசாரணையில் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.
- திரையுலகம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சி.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பிரபல நடிகர்கள் உள்ளிட்டவர்களின் மீது நடிகைகள் கூறிவரும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் திரையுலகம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தினமும் வெவ்வேறு நடிகர்களின் மீது நடிகைகள் பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகர் அலென்சியர் லோபஸ் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

எர்ணாகுளம் செங்க மாநாடு பகுதியை சேர்ந்த அந்த நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு 'ஆபாசம்' என்ற படத்தின் படப்பிடிப்புக்காக பெங்களூருவுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள ஒரு ஓட்டலில் வைத்து நடிகர் அலென்சியர் லோபஸ் தன்னிடம் தவறாக நடந்ததாக ஹேமா கமிட்டி விசாரணையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அதனடிப்படையில் நடிகர் அலென்சியர் லோபஸ் மீது செங்கமாநாடு போலீசார், பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






