கேரளாவில் மேலும் ஒரு நடிகர் மீது இளம் நடிகை `பாலியல் புகார்'

ஹேமா கமிட்டி விசாரணையில் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.திரையுலகம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சி.
கேரளாவில் மேலும் ஒரு நடிகர் மீது இளம் நடிகை `பாலியல் புகார்'
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் பிரபல நடிகர்கள் உள்ளிட்டவர்களின் மீது நடிகைகள் கூறிவரும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் திரையுலகம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தினமும் வெவ்வேறு நடிகர்களின் மீது நடிகைகள் பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகர் அலென்சியர் லோபஸ் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

எர்ணாகுளம் செங்க மாநாடு பகுதியை சேர்ந்த அந்த நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு 'ஆபாசம்' என்ற படத்தின் படப்பிடிப்புக்காக பெங்களூருவுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள ஒரு ஓட்டலில் வைத்து நடிகர் அலென்சியர் லோபஸ் தன்னிடம் தவறாக நடந்ததாக ஹேமா கமிட்டி விசாரணையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அதனடிப்படையில் நடிகர் அலென்சியர் லோபஸ் மீது செங்கமாநாடு போலீசார், பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிந்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com