search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    venkat prabhu AI image
    X

    எலான் மஸ்க்குடன் மு.க.ஸ்டாலின் இருக்கும் ஏஐ புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு

    • தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) வெளியாகவுள்ளது.
    • TESLA தமிழ்நாட்டுக்கு வந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் GOAT நகர்வாக அது இருக்கும்.

    விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் ஏஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "இந்த AI புகைப்படம் உண்மையாக வேண்டும் என விரும்புகிறேன். TESLA தமிழ்நாட்டுக்கு வந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் GOAT நகர்வாக அது இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்த எக்ஸ் பதிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை வெங்கட் பிரபு டேக் செய்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×