என் மலர்
சினிமா செய்திகள்
- படத்திற்கு ஹிட் 3 என பெயரிட்டுள்ளனர்.
- இத்திரைப்படம் மே 1 2025 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. நானி நடிப்பில் சூர்யாஸ் சாட்டர்டே படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது பல கோடிகளை வசூலில் குவித்துள்ளது.. இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து நானி அடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். கோர்ட் என்ற படத்திலும் மற்றும் நானியின் 32- படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
படத்தின் தலைப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்திற்கு ஹிட் 3 என பெயரிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. ப்ரோம்மோவில் மிகவும் ஸ்டைலாக வாயில் சுருட்டுடன் ஜீப்பை ஓட்டுகிறார். எதொ ஒரு கிரிமினலை கொலை செய்துவிட்டு ரத்தகறையுடன் வண்டியை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இத்திரைப்படம் மே 1 2025 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தை சைலேஷ் கொலானு இயக்கவுள்ளார். படத்தை வால் போஸ்டர் சினிமா தயாரிக்கவுள்ளது. இப்படத்தை குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே உருவாக ஆரம்பித்துள்ளது. படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் பிற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது.
போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு படக்குழு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஆசிரியர் என்ற வார்த்தை அர்த்தத்தையும் ஆசிரியரின் மேன்மையும் கூறியுள்ளனர்.
திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹேமா அறிக்கை வெளியானதையடுத்து பல நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
- தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள நடிகை சவுமியா பாலியல் சவுமியா குற்றம் சாட்டியுள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
அந்த அறிக்கை வெளியானதையடுத்து பல நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
நடிகைகளின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகள் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக ஏராளமான நடிகைகள் மற்றும் நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள நடிகை சவுமியா பாலியல் சவுமியா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நடிகை சவுமியா, "எனக்கு அப்போது 18 வயது, நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். என் பெற்றோருக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. அந்த நேரத்தில் தான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது என் வீட்டின் அருகே வசித்த நடிகை ரேவதியால் மயங்கிக் கிடந்தேன்
இயக்குநர் மற்றும் அவரது மனைவியுடன் படத்தில் நடிப்பதற்கான ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு நான் சென்றேன். படத்தில் நடிக்கும் போது நான் முழுக்க இயக்குனரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தேன். அவரின் ஒவ்வொரு மிரட்டலுக்கும் நான் பயந்தேன்.
ஒருநாள் இயக்குனரின் மனைவி வீட்டில் இல்லாதபோது என்னை அவரது மகள் என்றுகூறி முத்தமிட்டார். அப்போது நான் உறைந்துவிட்டேன். என்னால் அப்போது அதனை வெளியில் சொல்லமுடியவில்லை. பிறகு என்னை அவர் பலமுறை பலாத்காரம் செய்தார். நான் கல்லூரி படித்த காலத்தில் ஒரு வருடத்திற்கு மேல் இது நடந்தது. அப்போது நான் இயக்குனரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன்.
அப்போது அந்த இயக்குனர் என்னை அவரது மகள் என்றும் என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர் அப்போது என் மூளையை மொத்தமாக குழப்பிவிட்டார்.
இந்த அவமான உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு 30 வருடங்கள் ஆகியுள்ளது" என்று வேதனையுடன் அவர் தெரிவித்தார்.
"தனக்கு நேர்ந்த துயரத்தை காவல்துறையிடம் பகிர்ந்து கொண்டதாக கூறிய சௌமியா, தனது பாதுகாப்பை மனதில் வைத்து இயக்குனரின் பெயரை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
- கோட் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கோட் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் திரையரங்களில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கும், படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தள பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அன்புக்கு மிக்க நன்றி தோழர்களே. தளபதியின் மீதான என் அன்பைக் காட்ட இந்த வாய்ப்பை வழங்கிய ஏஜிஸ் தயாரிப்பு நிறுவனம் அர்ச்சனா, ஐஸ்வர்யா, அகோரம் சாருக்கு நன்றி. கண்டிப்பாக எனக்கு பிடித்தமான அண்ணன் வெங்கட் பிரபு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
- ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தி கோட் படத்தை விமர்சித்து விழுப்புரம் எம்,பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "விஜய் படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? 'காலமெல்லாம் பெரியது இதுதான்' என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்.
'என்றும் மாறாதது' என்பதுதானே 'சனாதனம்' என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், "படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும்" என்று ரவிக்குமார் எம்.பி. விமர்சனத்திற்கு த.வெ.க. பொதுச்செயலாளர் புதுவை என்.ஆனந்த் பதில் அளித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 'தி கோட்' படத்துக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி.
- தி கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை திரிஷா நடனமாடியுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை திரிஷா நடனமாடியுள்ளார். இந்நிலையில், சென்னை மதுரவாயல் ஏஜிஎஸ் திரையரங்கில் தி கோட் படத்தை பார்ப்பதற்கு நடிகை திரிஷா வந்துள்ளார்.
அதே போல் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் கோவையில் தி கோட் படத்தை கண்டு களித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோட் படம் புரமோஷனுக்காக ஆடு-யை கொண்டு வந்தேன்.
- முதலில் யானையை கொண்டு வரலாம் என்று இருந்தேன்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 'தி கோட்' படத்துக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் தமிழகத்தில் கோட் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த படத்தை பார்க்க கூல் சுரேஷ் பார்க்க வந்தார். எந்த ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனாலும் தவறாமல் வந்து படத்தைப் பற்றியும் படத்தில் நடித்த நடிகர்களை பற்றியும் மிகத் தெளிவாக விமர்சனம் செய்வதில் கூல் சுரேஷ் எப்போதுமே வித்தியாசம் தான். அதுவும் படத்தை பார்க்கும்போது படத்திற்கு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு ப்ராப்பர்ட்டியுடன் வந்து படத்தை புரொமோட் செய்வார்.
அந்த வகையில் ஒரு ஆட்டுடன் வந்தார். படத்தை பார்ப்பதற்கு முன்பே தளபதி தளபதி என கத்திக் கொண்டே தான் உள்ளே செல்கிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோட் படம் புரமோஷனுக்காக ஆடு-யை கொண்டு வந்தேன். முதலில் யானை கொண்டு வரலாம் என்று இருந்தேன். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அணுமதி வாங்க வேண்டும் என்பதால் யானையை கொண்டு வரவில்லை. நான் யானையை கொண்டு வருவதற்காக காரணம் என்னவென்றால் அவரது கட்சி கொடியில் யானை இருப்பது தான். தளபதியின் கோட்டு 2026-ம் ஆண்டு போடுங்க ஓட்டு.
இவ்வாறு சுரேஷ் கூறினார்.
- மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.
- நடிகைகளை தொடர்ந்து சீரியல் நடிகை பாபியல் புகார்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
அந்த அறிக்கை வெளியானதையடுத்து பல நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
நடிகைகளின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகள் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக ஏராளமான நடிகைகள் மற்றும் நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் சீரியல் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்த நடிகை, கேரளாவை சேர்ந்த சீரியல் தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் மீது திருவனந்தபுரம் அருங்காட்சியகம் போலீசில் பாலியல் புகார் கூறியிருக்கிறார்.
ஒரு சீரியலில் நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து, 2018-ம் ஆண்டு கனகாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து சீரியல் தயாரிப்பாளர் சுதீஷ் சேகர் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் ஷானு ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் சுதீஷ் சேகர் மற்றும் ஷானு ஆகிய இருவரின் மீதும் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களின் மீது 376 (கற்பழிப்பு) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். திரைப்பட நடிகைகளை தொடர்ந்து, சீரியல் நடிகை ஒருவரும் பாலியல் புகார் கூறியிருப்பது கேரளாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
- தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 'தி கோட்' படத்துக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 'தி கோட்' படத்துக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் தமிழக தியேட்டர்களில் சிறப்பு காட்சியுடன் அதிக பட்சம் ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வெளிமாநிலங்களில் இந்த படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் தமிழகத்தில் கோட் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.
- ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தினார் என சுசித்ரா கூறியிருந்தார்.
- சுசித்ரா சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை. அவர் மீது புகார் அளித்துள்ளேன் என ரீமா கல்லிங்கல் கூறினார்.
மலையாள பட உலகம் பாலியல் புகாரில் சிக்கி அல்லோலப்படும் நிலையில் தமிழில் 'யுவன் யுவதி, சித்திரை செவ்வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாக பின்னணி பாடகி சுசித்ரா குற்றம் சாட்டினார்.
அவர் கூறும்போது, "ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தினார். அதில் இளம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு போதை பழக்கத்துக்கு அடிமையானார்கள். இந்த தகவலை அந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். போதை விருந்து நடத்தியதால்தான் ரீமா கல்லிங்கலின் சினிமா வாழ்க்கை வீழ்ச்சி அடைந்தது'' என்றார். இது பரபரப்பானது.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரீமா கல்லிங்கல் பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்வதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் ரீமா கல்லிங்கல் வெளியிட்டுள்ள பதிவில், "சுசித்ரா தவறான தகவலை வெளியிட்டுள்ளார். ஆதாரம் இல்லாமல் என் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். அவர் சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை. எனவே சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது சிறப்பு விசாரணை குழு போலீசில் புகார் அளித்து இருக்கிறேன். அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
- வாழை படம் பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாருக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், வாழை படம் பார்த்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், " படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை!
'திரைப்படத்தின் வெற்றி' என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் 'வாழை' ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம்.
விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!" என குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். (இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. )" என்றார்.
- கோட் படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது.
- கோட் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.
விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) வெளியாகவுள்ளது.
இதனையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை தி கோட் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் வீடியோ வெளியிட்டு கோட் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், விஜய் நடித்துள்ள THE GOAT திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும். சில விஷயங்களை நம்பிக்கையோடு சொல்வது போல, இந்தப்படம் மாபெரும் சூப்பர்ஹிட் படமாக இருக்குமென உள்ளுணர்வு சொல்கிறது. நான் இந்தப் படத்தில் நடிக்கல, ஆனாலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை இருக்கு" என்று பேசியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






