என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.
- தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை திரைப்பிரபலங்களும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்படம் தனுஷின் ராயன் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூலை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விஜய் இதற்கு முன் நடித்த லியோ மற்றும் வாரிசு படத்தின் வசூலை விட இது குறைவுதான். இன்னும் வரும் வார இறுதியில் திரைப்படத்தின் வசூல் இன்னும் மிகப்பெரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
- இப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான டப்பாஸ் சில வாரங்களுக்கு முன் வெளியானது.
இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், திரைப்படம் தற்பொழுது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியானது. இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் அடுத்த பாடலான `அடியாத்தி' என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியீட்டு வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கீமோதெரபியின் மற்றொரு பக்க விளைவு மியூகோசிடிஸ் ஆகும்.
- உங்களில் யாராவது அதை அனுபவித்திருந்தால் அல்லது ஏதேனும் பயனுள்ள வைத்தியம் தெரிந்திருந்தால் தயவுசெய்து பரிந்துரைக்கவும்.
நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன் ஹினா கான் மார்பக புற்றுநோயால் இறந்துவிட்டதாக பொய்யான வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில், நடிகை ஹினா கான் தனது மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு இடையே மியூகோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். மேலும் அதற்கான தீர்வு அளிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "கீமோதெரபியின் மற்றொரு பக்க விளைவு மியூகோசிடிஸ் ஆகும். இருப்பினும் அதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களின் அறிவுரைகளை நான் பின்பற்றுகிறேன். உங்களில் யாராவது அதை அனுபவித்திருந்தால் அல்லது ஏதேனும் பயனுள்ள வைத்தியம் தெரிந்திருந்தால் தயவுசெய்து பரிந்துரைக்கவும். நீங்கள் சாப்பிட முடியாதபோது மிகவும் கடினமாக உள்ளது. இது எனக்கு பெரிதும் உதவும்" என கூறியுள்ளார்.
- இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகியுள்ளது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோட் படம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி கேட்டக்கப்பட்டது. அவர் கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படம் குறித்து ஓபிஎஸ் கூறியதாவது, புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திய பிறகு நானும் திரைப்படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என கூறினார்.
- நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
- ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14-ந்தேதி முதல் 15-ந்தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.
மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளார்.
- எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை.
- பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னது இல்லை.
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகைகள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாலியல் தொல்லை அனுபவங்களையும் பகிர்கிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியாமணியும் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
பிரியாமணி கூறும்போது, ''மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைத்து அறிக்கை வெளியாகி இருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்கிறார்கள்.
மலையாளத்தில் கமிட்டி அமைத்ததுபோல தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகிலும் கமிட்டிகள் அமைத்தால் நல்லது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும். திரைத்துறை மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது. இப்போது கேமரா போன்கள் வந்துள்ளன. ஆனாலும் இப்போது வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அப்படியே தொடர வேண்டும்.
எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை. பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னது இல்லை'' என்றார்.
- நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் உடைமாற்ற கூட சரியான இடம் கிடையாது.
- கேரவனில் உடை மாற்றுவது மட்டுமன்றி, வேறு மோசமான விஷயங்களும் நடந்துள்ளன.
மலையாள திரையுலகில் ஒரு காலத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷகிலா. இவரது படங்கள் மம்முட்டி, மோகன்லால் படங்களைவிட அதிகம் வசூல் செய்துள்ளன.
தற்போது ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, ஷகிலா தொடர்ந்து தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். மலையாள பட உலகம் போன்று தமிழ் திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன என்றார்.
மேலும் ஷகிலா கூறும்போது, "நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் உடைமாற்ற கூட சரியான இடம் கிடையாது. எந்த வசதியும் இல்லாத இடங்களுக்கு செல்லும்போது மேலே ஒரு ஆடையை போர்த்திவிட்டு உடை மாற்றுவோம்.
அப்போது எங்களை சுற்றி நிறைய ஆண்கள் நின்று கொண்டு இருப்பார்கள். அது பெரிய கொடுமையாக இருக்கும். இப்போது இருப்பது போன்று கேரவன் வசதிகள் அப்போது அதிகம் இல்லை.
கேரவனில் உடை மாற்றுவது மட்டுமன்றி, வேறு மோசமான விஷயங்களும் நடந்துள்ளன. அதை நான் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்.
மலையாள பட உலகில் ஒரு அதிகார குழு உள்ளது. அந்த குழுவில் மோகன்லால், மம்முட்டி, முகேஷ் உள்பட பலர் இருக்கிறார்கள்'' என்றார்.
- சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் வைபவ் நடித்துள்ளார்.
- தற்பொழுது படத்தில் நடித்த மொட்ட ராஜேந்திரன் மற்றும் ஆனந்த் ராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர்.
கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் நடித்து இருந்தார். விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தில் வைபவின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்பொழுது படத்தில் நடித்த மொட்ட ராஜேந்திரன் மற்றும் ஆனந்த் ராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். ராஜேந்திரன் மெமரி தாஸ் என்ற கதாப்பாத்திரத்திலும் ஆனந்தராஜ் ஸ்பிலிட் சூசை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதாப்பாத்திரத்தின் பெயர் மிகவும் வித்தியாசமாக நகைச்சுவையாகவும் இருக்கிறது.
திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
- படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் விக்ரம் தங்கலான் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார்
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
தங்கலானே வா வா ஆதியோனே - War Song வீடியோ வெளியானதுதங்கலானே வா வா ஆதியோனே - War Song வீடியோ வெளியானதுஇதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
முன்னதாக இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் விக்ரம் தங்கலான் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என சீயான் விக்ரம் தெரிவித்தார்.
தற்பொழுது படத்தில் இடம்பெற்ற வார் சாங் படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகனாகவும் மற்றும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
- தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
சின்னதிரையில் இயக்குனராக அறிமுகமாகிய சமுத்திரக்கனி அதற்கடுத்து நாடோடிகள் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகனாகவும் மற்றும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. தற்பொழுது தெலுங்கு திரைத்துறையில் பிரபல நட்சத்திரங்களுக்கு வில்லன் கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் சமுத்திரகனியே நடித்து வருகிறார். அண்மையில் வெளியான இந்தியன் 2 படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது. இப்படத்தை தன்ராஜ் கொரனானி இயக்கியுள்ளார்.
படத்தின் முதல் பாடலான குல சாமி போல என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார். படத்திற்கு அருண் சிலுவேரு இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது டான் திரைப்படம்.
- இயக்குனரான சிபி சக்கரவர்த்திக்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது.
2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது டான் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, பிரியங்கா மோகன் மற்றும் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
காலேஜ் ஸ்டூடெண்ட் அவனுடௌய கனவை தேடும் பயணமாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டதால். இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிள் கலெக்ஷனின் பின்னியது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்திக்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமண விழாவில் சிவகார்த்திகேயன் மற்றும் பால சரவணன் கலந்துக் கொண்டனர். இவர்கள் கலந்துக் கொண்ட புகைப்படங்களை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பால சரவணன் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் காரில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது.
- கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க புஸ்ஸி ஆனந்த் வந்தார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் காரில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. 2026 இல் விஜய் தமிழக முதலமைச்சர் ஆவார் என்பதை குறிக்கும் விதமாக இந்த நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய புஸ்ஸி ஆனந்திடம் 'தி கோட்' படத்தில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அதைநோக்கி தானே எங்களது கட்சி பயணம் உள்ளது" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






