என் மலர்
சினிமா செய்திகள்
- தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா.
- தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படக்குழு விநாயகர் சதூர்த்தி வாழ்த்து தெரிவித்து புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டர் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. படத்தை குறித்து
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.
- இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை சில வாரங்களுக்கு முன் வெளியானது.
இப்படத்தில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். திரைப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், தற்போது படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக படத்தின் அடுத்த பாடல் இந்த மாதம் வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் 3 - வது பாடலான தாவூதி பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என புது போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர்கள்- தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
- தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையிலான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்.
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் நிர்வாகிகள் ஹேமச்சந்திரன், பிரேம், தாசரதி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமையிலான சங்க நிர்வாக குழுவினர் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.
இதுபற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 18.8.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் நிர்வாகிகள் இடையே நடந்த கலந்து ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர்கள்- தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
அதன் மீது தீவிர கலந்தாலோசனைக்கு பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக இரு தரப்பிற்கும் சாதகமான புதிய புரிந்துணர்வு ஒப்பந்ததிற்கான 37 பரிந்துரைகளும், நடிகர் தனுஷ் சம்பந்தப்பட்ட சுமூகமான பரஸ்பர தீர்வு அடங்கிய ஆவணங்களும், இன்றைய சந்திப்பில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான முரளி ராமசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் இடையே ஒரு தீர்மானம் எட்டப்பட்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையிலான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி, அதில் கணிசமான முன்னேற்றமும் உள்ளதால், புதிய படங்களுக்கு தற்போது பூஜையிட்டு தொடங்கக் கூடாது என்றும், நவம்பர் 1-ந்தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்றும் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்து திரைத்துறை தொழிலாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பணிகள் சுமூகமாக நடைபெற, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழிவகுக்கும் எனவும் நம்புகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மம்மூட்டியின் புதிய படத்தை பிரபல தமிழ் இயக்குநரான கவுதம் மேனன் இயக்குவுள்ளார்.
- இப்படத்திற்கு ‘Dominic and The Ladies' Purse’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் அண்மையில் வெளியான டர்போ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மம்முட்டியின் புதிய படத்தை பிரபல தமிழ் இயக்குநரான கவுதம் மேனன் இயக்குவுள்ளார். இப்படத்திற்கு 'Dominic and The Ladies' Purse' என்று பெயரிடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை மம்முட்டி தயாரிக்கிறார்.
முன்னதாக, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படமான துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காக காத்துக்கிடக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
- இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசலாயோ' என்ற பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிம்ரன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘THE LAST ONE' என பெயரிடப்பட்டுள்ளது.
- லோகேஷ் குமார் இதற்கு முன் மை சன் இஸ் கே மற்றும் N4 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
நடிகர் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் அண்மையில் அந்தகன் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் திரைப்படம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'THE LAST ONE' என பெயரிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் குமார் இதற்கு முன் மை சன் இஸ் கே மற்றும் N4 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய மை சன் இஸ் கே இதுவரை 4 விருதுகள் பெற்றுள்ளது. இந்திய உலக திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீப்க் பக்கா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். படத்தின் பிற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் நடித்து இருந்தார். விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தில் வைபவின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்பொழுது படத்தில் நடித்த மொட்ட ராஜேந்திரன் மற்றும் ஆனந்த் ராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
தற்பொழுது ஜான் விஜய் கதாப்பாத்திரத்தின் பெயர் வெளியிட்டுள்ளனர். ஜான் விஜய் டமார் லால் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதாப்பாத்திரத்தின் பெயர் மிகவும் வித்தியாசமாக நகைச்சுவையாகவும் இருக்கிறது.
திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
- கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசலாயோ' என்ற பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை திரைப்பிரபலங்களும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்ராந்த் அடுத்து ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் இசையை பாலமுரளி பாலு மேற்கொண்டுள்ளார்.
ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த் மற்றும் விஷ்ணுவிஷால் நடித்து இருந்தனர். விக்ராந்த் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அடுத்ததாக விக்ராந்த் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் வில்அம்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை பாலமுரளி பாலு மேற்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் போன்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விக்ராந்துடன் யோகி பாபு, பவித்ரா மாரிமுத்து, இனிகோ பிரபாகர் மற்றும் மிப்பு சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்போகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






