என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி

    மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை ஜோ திரைப்படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான காத்திருந்தேன் பாடல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
    • இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ' என்ற பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில்.

    பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். அதில் இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடலை பாடியுள்ளார்.

    27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெற செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம் பெற்றுள்ளது. ஓனம் பண்டிகை ஸ்பெஷலாக இப்பாடலை படக்குழு வெளியிடவுள்ளனர்.

    பாட்டின் இந்த கிலிம்ப்ஸ் காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்..

    இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான டப்பாஸ் சில வாரங்களுக்கு முன் வெளியானது.

    இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்..

    படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், திரைப்படம் தற்பொழுது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

    செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியானது. இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் அடுத்த பாடலான `அடியாத்தி' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு.
    • நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு என தகவல்.

    தென்னிந்திய நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

    நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.

    கேரளாவின் ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைப்பது குறித்தும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தேர்தல் பணிகளை தொடர்ந்தால் நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறுகையில், "பொதுக்குழு முன்பாக இருந்த சவால்களை மீறி பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது. பொதுக்குழு மகிழ்ச்சியாக நடந்துள்ளது. சங்கர தாஸ் சுவாமிகள் பெயரில் டெல்லி கணேஷ், விஜயகுமாரி, 10 நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது.

    10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

    நடிகைகளுக்கு பாலியல் புகார் குறித்து நடிகை ரோகிணி பேசுகையில்," 2019ம் ஆண்டிலேயே கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகை மட்டும் இன்றி யாரும் புகார் கொடுக்கலாம். வழக்கறிஞர், என்ஜிஓ கமிட்டியில் உள்ளனர்.

    புகார் தெரிவிக்க எண் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    பெண் உறுப்பினர்களுக்கு புகார் எண், எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். புகாருக்கு உள்ளான நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து வெளியே தெரிவிக்கப்படாது. எந்த பெண்ணும் பயத்துடன் இருக்கக்கூடாது.

    எந்த நடிகையும் தைரியமாக புகார் கூறலாம்.

    நடிகை மீதான புகார் பெரிதுபடுத்தப்படுகிறது. நடிகை கூறும் புகார் மட்டும் திரும்ப திரும்ப பேசப்படுகிறது. எல்லா துறையிலும் அத்துமீறல் இருக்கிறது" என்றார்.

    • திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார்.
    • நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோனே அண்மையில் போட்டோஷூட் எடுத்தார்.

    பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோனே அண்மையில் போட்டோஷூட் எடுத்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

    நேற்று மாலை 5 மணியளவில் மும்பையின் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் தீபிகா அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    • நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • கேரளாவின் ஹேமா கமிட்டி பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.

    தென்னிந்திய நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தொடங்கியுள்ளது.

    நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் சைக்கிளில் வந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கேரளாவின் ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைப்பது குறித்தும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்து உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தை நயந்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. தற்பொழுது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

    இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர் காலத்திற்கு டைம் டிரேவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.

    ஹிப்ஹாப் தமிழா கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது.

    அடுத்ததாக `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.

    இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியானது.

    படத்தின் ப்ரோமோ பாடலான பூம்பாஸ்டிக் என்ற பாடலின் வீடியோ படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடல் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.

    இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் மேக்கிங் வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியாகியது. தற்பொழுது படத்தின் டிரைலர் குறித்து படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளனர்.

    படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

    இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்ராந்த் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இவர் இதற்கு முன் வில்அம்பு படத்தை இயக்கியுள்ளார்.

    ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த் மற்றும் விஷ்ணுவிஷால் நடித்து இருந்தனர். விக்ராந்த் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    அடுத்ததாக விக்ராந்த் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் வில்அம்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை பாலமுரளி பாலு மேற்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் போன்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் விக்ராந்துடன் யோகி பாபு, பவித்ரா மாரிமுத்து, இனிகோ பிரபாகர் மற்றும் மிப்பு சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று விஜய் சேதுபதி மற்றும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

    படத்திற்கு `தி கில்லர் மேன்' என பெயரைட்டுள்ளனர். படத்தின் இறுதி கட்ட பட பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைபடம் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வர்மா என்ற கதாப்பாத்திரத்தில் விநாயகன் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார்.
    • ஐதராபாத் சென்றபோது விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக வர்மா என்ற கதாப்பாத்திரத்தில் விநாயகன் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். விநாயகன் மலையாள திரையுலகில் மிக முக்கிய நடிகர்களு ஒருவராவார்.

    இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த விநாயகன், ஐதராபாத் சென்றபோது விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஐதராபாத் சென்றபோது போதையில் விநாயகன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் விநாயகன் விமான பாதுக்காப்பு காவலர்கள் அவரை தனியாக ரூமிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறுகிறார். நீங்கள் வேண்டும் என்றால் சிசிடிவி ஃபூட்டேஜை சரிப்பாருங்கள் நான் அப்படி என்ன தவறு செய்தேன் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
    • படத்தின் முதல் பாடலான `மனசலாயோ' என்ற பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும்

    'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசலாயோ' என்ற பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில்.

    பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோஅவி தற்பொழுது வெளியிட்டுள்ளனர். அதில் இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகர் பாடலை பாடியுள்ளார். அது யார் என்று கண்டு பிடியுங்கள் என படக்குழு அறிவித்துள்ளது.

    இப்பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளதாக நெட்டிசன்கள் அவர்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்
    • படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை சில வாரங்களுக்கு முன் வெளியானது.

    இப்படத்தில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

    படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டீசர் காட்சியில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இடையே உள்ள உறவை மையப்படுத்தியே காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அழகான ஃபீல்குட் மூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திரைப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×