ரஜினி படத்திற்காக மீண்டும் உயிர்பெறும் வசீகர குரல்

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான `மனசலாயோ' என்ற பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும்
ரஜினி படத்திற்காக மீண்டும் உயிர்பெறும் வசீகர குரல்
Published on

'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசலாயோ' என்ற பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில்.

பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோஅவி தற்பொழுது வெளியிட்டுள்ளனர். அதில் இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகர் பாடலை பாடியுள்ளார். அது யார் என்று கண்டு பிடியுங்கள் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளதாக நெட்டிசன்கள் அவர்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com