என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி

    மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை ஜோ திரைப்படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை சமீபத்தில் பார்த்த பார்த்திபன் பட இயக்குனரான சீனு ராமசாமி மற்றும் அப்படத்தில் நடித்த ஏகனை பாராட்டியுள்ளார்.

    அவர் கூறியதாவது " இவ்வளவு மனித நேயமிக்க படத்த நான் சமீபத்துல பாக்கல. ஏகனின் நடிப்பு மிக நன்றாக உள்ளது. ஆல் தி பெஸ்ட் ஏகன் . இதுக்கு மேல பேசுனனா எமோஷனல் ஆகிடுவேன்" என கூறிவிட்டு சென்றுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகம் ஆகப்போகிறார்
    • ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்திற்கு யார் கதாநாயகனாக நடிக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

    பிரபல நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தற்போது GOAT படத்தில் நடித்து மக்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்து உள்ளார். சினிமா தொடர்பான படிப்புகளும் அவர் படித்து உள்ளார். சினிமா இயக்குவதில் ஆர்வமாக உள்ளார்.

    இதை யொட்டி 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகம் ஆகப்போகிறார் என செய்தி சில மாதங்களுக்கு முன் லைகா நிறுவனம் அறிவித்து இருந்தது.

    லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து உள்ளது. மேலும் லைகா தயாரிப்பில் கத்தி படத்தில் விஜய் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்திற்கு யார் கதாநாயகனாக நடிக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. இவர் நடிக்க போகிறார் , அவர் நடிக்க போகிறார் என் வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்பொழுது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

     

    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சுதீப் கிஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுதீப் கிஷன் சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
    • மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூடநம்பிக்கை கருத்துக்களை பரப்பிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு பேசிய வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த வகையில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான அமீர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

    அமீர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது,

    சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிற்போக்குத்தனமான விஷக் கருத்துகளைப் பரப்பிய மகா விஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியும் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும், அவரது வார்த்தைக்கேற்ப உரிய நடவடிக்கையை எடுத்த தமிழக காவல்துறைக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.

    சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப் பார்க்கின்ற சனாதன கருத்திற்கு எதிராக விழித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தை, இப்போது ஆன்மிகம் என்கிற போர்வையில் "முற்பிறவி பாவங்கள்" என்ற சொல்லின் மூலம், வர்க்க ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது என்பதையே அசோக் நகர் அரசினர் மகளிர் பள்ளியின் நிகழ்வு நம் எல்லோருக்கும் உணர்த்துகிறது.

    தங்கள் கண் முன்னே நடைபெற்ற பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையான பேச்சுக்களை தடுக்காமல், கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மத்தியில் தனது ஞானக்கண் கொண்டு அநீதியை தட்டிக் கேட்ட மானமிகு தமிழாசிரியர் சங்கர் அவர்களுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை வழங்கியதோடு நின்றுவிடாமல், அதே பள்ளியில் அவரைத் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களையும் தமிழக முதல்வர் அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    சமூகத்தை வழி நடத்தக்கூடிய அறிவார்ந்த நாளைய தலைமுறையை உருவாக்கும் பட்டறையாக கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்லாது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமை என்பதை மறந்து, சமீப காலமாக தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களில், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களிலும் யூட்யூப் போன்ற ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருகிறது.

    எந்த விதமான கல்வித் தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமாகும்.

    அதே போல, பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரைக் கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாகவே இருந்தாலும், வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் திரைப்பட அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியதே. திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும்.

    மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு கல்வி நிறுவனங்களில் திரைக் கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவர்களை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    • நடிகர் சங்கப் பொதுக்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.
    • உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.

    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் நடிகர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் நடிகர் விஷால், பொருளாளர் நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்பட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் கட்டப்படுவதற்கு அளித்துவரும் ஆதரவுகளுக்காக நடிகர் சங்கப் பொதுக்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.


    நடிகர் சங்கக் கட்டிடம் 25 கோடி ரூபாய் வங்கிக் கடன் மூலம் கட்டப்படுகிறது.

    இதற்கு தேவையான 12 கோடி ரூபாய் வங்கிக் கடன் டெபாசிட் தொகைக்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

    மேலும் தம் நண்பர்கள் மூலம் 5 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் பரிந்துரைகள் செய்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து, நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது, அதில் பேசிய சங்க நிர்வாகிகள், சங்க கட்டிடத்துக்காக கடன் வாங்கும் போது தேவையான டெபாசிட் தொகையில் பெரும் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துப் பாராட்டி பேசினர்.

    மேலும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் பெருமக்களுக்கும், குறிப்பாக வங்கி வைப்புத் தொகைக்காக பெரும் நிதி திரட்டிட ஏற்பாடு செய்தமைக்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்.

    ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து செல்வதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

    ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது.

    என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும் திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத்துறை நண்பர்கள், பத்திரிகை, ஊடகத் துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள் என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.

    எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

    நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலன்களை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

    இந்த நேரந்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

    என்னுடைய முன்னுரிமை எப்போதும் என் நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

    நான் என்றும் எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
    • இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ' பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடலை பாடியுள்ளார்.

    27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெற செய்துள்ளனர்.

    மனசிலாயோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியார் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விகாஸ் சேத்திக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.

    செப்டம்பர் 7 ஆம் தேதி நடிகர் விகாஸ் சேத்தி மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதான அவர் பாலிவுட்டில் துணை காதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

    நாசிக் மாவட்டத்திற்கு குடும்ப நிகழ்விற்காக விகாஸ் சேத்தியும் அவரது மனைவி ஜான்வி சேத்தியும் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால் விகாஸ் சேத்தி மருத்துவமனைக்கு செல்லவில்லை. பின்னர் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.

    விகாஸ் சேத்தியின் கடைசி தருணங்கள் குறித்து அவரது மனைவி ஜான்வி சேத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விகாஸ் சேத்தியின் இறுதி சடங்குகள் இன்று மும்பையில் நடைபெறும் என்று அவரது மனைவி தெரிவித்தார்.

    • டில்லி பாபு பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
    • தற்பொழுது மிடிக்கிளாஸ், வளையம், யார் அழைப்பது படங்களை தயாரித்து வந்தார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனரான டில்லி பாபு பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

    தயாரிப்பாளர் டில்லி பாபு மரகத நாணயம், ராட்சதன், பேச்சுலர், ஓ மை கடவுளே, கள்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்பொழுது மிடிக்கிளாஸ், வளையம், யார் அழைப்பது படங்களை தயாரித்து வந்தார்.

    இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான டில்லி பாபு உடல் நலக்குறைவால் நேற்று இரவு 12.30 மணியளவில் காலமானார். இவரின் திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவிற்கு இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று தமிழ் நாட்டில் மட்டும் திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலில் மிரட்டியுள்ளது.
    • நடிகர் அஜித் கோட் திரைப்படத்தை பற்றி கூறியதை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை திரைப்பிரபலங்களும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் வசூலித்தது. படத்தில் மட்ட என்ற பாடல் ரசிகர்கர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலில் விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா நடனமாடியுள்ளார். அதிலும் விஜய் மற்றும் திரிஷா கில்லி படத்தில் அப்படி போடு பாடலில் ஆடிய ஸ்டெப்பை இப்பாடலிலும் ஆடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    இன்று தமிழ் நாட்டில் மட்டும் திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலில் மிரட்டியுள்ளது.

    இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் கலந்துக் கொண்ட வெங்கட் பிரபு. படத்தை குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அதில் அவர் கூறியதாவது " விஜய் சாருக்கு திரைப்படம் மிகவும் பிடித்து இருந்தது. படத்தின் டைரக்டர் கட்- இன் நேர அளவு 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். இதை கண்டிப்பாக ஓடிடி-யில் வெளியிடுவோம் என கூறியுள்ளார்.

    நடிகர் அஜித் கோட் திரைப்படத்தை பற்றி கூறியதை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். அதில் அஜித் வெங்கட் பிரபுவிடம் " டேய் படம் நல்லா போதுன்னு கேள்வி பட்டேண்டா, வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் வசூலித்தது.
    • மட்ட பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை திரைப்பிரபலங்களும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் வசூலித்தது. படத்தில் மட்ட என்ற பாடல் ரசிகர்கர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலில் விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா நடனமாடியுள்ளார். அதிலும் விஜய் மற்றும் திரிஷா கில்லி படத்தில் அப்படி போடு பாடலில் ஆடிய ஸ்டெப்பை இப்பாடலிலும் ஆடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    இந்த மட்ட பாடலில் ப்ரோமோ வீடியோவை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் கலந்துக் கொண்ட வெங்கட் பிரபு. படத்தை குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அதில் அவர் கூறியதாவது " விஜய் சாருக்கு திரைப்படம் மிகவும் பிடித்து இருந்தது. படத்தின் டைரக்டர் கட்- இன் நேர அளவு 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். இதை கண்டிப்பாக ஓடிடி-யில் வெளியிடுவோம் என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேற்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி அவர்களது இரு மகன்களுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.
    • இன்று மற்றொரு வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

    சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கு விக்கி மற்றும் நயன் அவ்வப்போது அவர்கள் ஒன்றாக வெளியே செல்லும் வீடியோ. குழந்தைகளுடன் செலவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதேப்போல் நேற்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி அவர்களது இரு மகன்களுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டன்ர்.

    இந்நிலையில் இன்று மற்றொரு வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் இரண்டு குழந்தைகளும் ஒரு ரூமின் கதவை திறக்க முயற்சி செய்கின்றனர். அதை அவர்களால் திறக்க முடியாதலால். தன்னுடைய தந்தையான விக்கியை "விக்கி அப்பா, விக்கி அப்பா" என்ற மழலை குரலில் அழைப்பது மிகவும் க்யூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது
    • கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒவ்வொன்றாக அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

    வைபவ் கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் நடித்து இருந்தார். விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தில் நடிகர்களின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒவ்வொன்றாக அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

    தற்பொழுது படக்குழு சுனில் ரெட்டி மற்றும் மணிகண்டனின் கதாப்பாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பூச்சி மற்றும் குடி குமார் என்ற கதாப்பாத்திரத்தில் இருவரும் நடித்துள்ளர்.

    கதாப்பாத்திரத்தின் பெயர் மிகவும் வித்தியாசமாக நகைச்சுவையாகவும் இருக்கிறது.

    திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×