என் மலர்
சினிமா செய்திகள்
- கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படங்களில் டிராஸ் தி டெஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த படிஸ்டா, பிளேட் ரன்னர் 2047, DUNE உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
- கனடாவில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா (TIFF) தொடங்கி நடைபெற்று வருகிறது
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஷோவான WWE நிகழ்ச்சியில் வரும் மல்யுத்த வீரர் டேவ் படிஸ்டாவை யாராலும் மறக்க முடியாது. எவ்வளவு வலியையும் தாங்கிக் கொள்வதில் தேர்ந்தவராக படிஸ்டா [55 வயது] புகழ் பெற்று விளங்கினார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் படிஸ்டா நடிகராக கலக்கி வருகிறார்.

மார்வெல் யுனிவெசில் கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படங்களில் டிராஸ் தி டெஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த படிஸ்டா, பிளேட் ரன்னர் 2047, DUNE உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் படிஸ்டாவின் டிரான்ஸ்பர்ண்மெசன் புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா (TIFF) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தான் நடித்திருந்த The Last Showgirl படத்தின் திரையிடலுக்காக வந்த படிஸ்டாவின் புது லுக் வைரலாகி வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுவெளியில் தோன்றியபோது எடுக்கப்பட்ட படிஸ்டாவின் புகைப்படங்களையும் தற்போதய புகைப்படத்தையும் பதிவிட்டு படிஸ்டாவுக்கு என்னாச்சு என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகினர். தனது ஜிம் பாடி லுக்கில் இருந்து மாறுபட்டு மிகவும் ஒல்லியான தோற்றத்தில் பாடிஸ்டா உள்ளதே இந்த கேள்விக்கு காரணம். டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
- பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதி அளித்து உதிவினர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் , பிரபாஸ், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதி அளித்து உதிவினர்.
இந்நிலையில் தமிழ் சினிமவின் முன்னணி நடிகரான சிம்பு 6 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். தமிழ் நடிகர் ஆந்திராவில் நடந்த பேரிடருக்காக நிதிக் கொடுத்தது மிகவும் பெருந்தன்மையான விஷயம் என்று நெட்டிசன்கள் சிம்புவை பாராட்டி வருகின்றனர்.
சிம்பு தற்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவிக்கு திரைப்படக்குழு வாழ்த்து தெரிவித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
- இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவிக்கு திரைப்படக்குழு வாழ்த்து தெரிவித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இதுக்குறித்து ஒரு கிளிம்ப்ஸ் காட்சியையும் வைத்துள்ளனர். அதில் ஜெயம் ரவி டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அவரை முறைத்து பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதற்கு ஜெயம் ரவி அப்படி எல்லாரும் பாக்காத்தீங்க எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு என கூறுகிறார்.
திரைப்படத்தை குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- துபாய் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் தெரிவித்தார்.
- பாலியல் புகார் கூறிய பெண் மற்றும் அவரது கணவரிடம் சிறப்பு புலனாய்வு குழு நேற்று விசாரணை நடத்தியது.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவரங்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை அம்பலமாக்கியது. அதன் தொடர்ச்சியாக பல நடிகைகள் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.
அதன் அடிப்படையில் மலையாள திரையுலக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டது. பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி மீதும் வழக்கு பதியப்பட்டது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி துபாய் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் நடிகர் நிவின் பாலி உள்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
தன் மீது புகார் கூறிய அந்த பெண் யார் என்பது தனக்கு தெரியாது என்றும், அந்த பெண்ணை தான் சந்தித்ததே இல்லை என்றும் நடிகர் நிவின் பாலி கூறினார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டில் சதி இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
அது மட்டுமின்றி புகார் கூறிய பெண் தனது குற்றச்சாட்டில், குறிப்பிடப்பட்டிருந்த நாளில் தான் துபாயில் இல்லை எனவும், கேரளாவில் இருந்ததாகவும் நடிகர் நிவின் பாலி தெரிவித்தார். மேலும் கேரளாவில் இருந்ததற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.
இதையடுத்து அந்த பெண், தூக்க கலக்கத்தில் சம்பவம் நடந்த தேதியை மாற்றி கூறிவிட்டதாகவும், சம்பவம் நடந்தது வேறுநாள் என்றும் கூறி மற்றொரு நாளில் துபாயில் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து பாலியல் புகார் கூறிய பெண் மற்றும் அவரது கணவரிடம் சிறப்பு புலனாய்வு குழு நேற்று விசாரணை நடத்தியது. அவர்கள் 2 பேரிடம் கொச்சியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இருவரிடமும் சிறப்பு புலனாய்வு குழுவினர் வாக்குமூலம் பெற்றனர்.
மேலும் இந்த விவகாரத்தில் மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவினர் துபாய் செல்ல உள்ளனர். பெண் புகாரின்படி சம்பவம் துபாயில் நடந்திருப்பதாக கூறப்பட்டிருப்பதால், அதன் உண்மை நிலையை கண்டறிய விசாரணை குழு துபாய் செல்ல முடிவு செய்துள்ளது.
- பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
- இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. நாளை நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் கொண்டாடவுள்ளார். இதை முன்னிட்டு பிரதர் படக்குழு நாளை காலை 11.11 மணிக்கு படத்தின் அப்டேட்டை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. ஊட்டியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இன்று படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட சூர்யாவை ரசிகர்கள் சூர்யாவை சூழ்ந்துக் கொண்டனர். அப்பொழுது சூர்யா அவர்களிடம் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் சிறப்பாக ஓடிய ஆர்.டி.எக்ஸ் திரைப்படத்தின் இயக்குனரான நஹாஸ் சூர்யாவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. நவம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமெரிக்கவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற ஸ்டாலின் அந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்
- தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலினின் புகைப்டபத்தை பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சிகாகோ சென்றார்.
சிகாகோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபின் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை 'சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலினின் புகைப்டபத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி, அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்து எங்கள் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த அபாரமான வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது." என தெரிவித்துள்ளார்.
- தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் வசூலித்தது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை திரைப்பிரபலங்களும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில். தற்பொழுது திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் 288 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இது மாபெரும் வசூலாகும். இன்னும் வரும் வாரங்களில் 400 கோடி ரூபாயை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.
- லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தின் மூன்றாவது பாடலான டம்மா கோலி என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அனந்த் `நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கினார்.
- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகியது ரகு தாத்தா திரைப்படம்.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் அனந்த் .
இப்பொழுது அனந்த் `நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கினார். திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கி மசாலா பாப்க்கார்ன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் அனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர் ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படத்தின் ஓடிடி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் 13 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகியது ரகு தாத்தா திரைப்படம். இந்தி திணிப்பை எதிர்த்து போராடும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியராவார்.
இத்திரைப்படம் வரும் 13 ஆம் தேதி ஓடிடி- யில் வெளியாகவுள்ளது. திரைப்படம் Zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களையும் திரையரங்களில் காண தவற விட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார்.
- இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது
ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ' பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடலை பாடியுள்ளார்.
27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெற செய்துள்ளனர். மனசிலாயோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. பாடல் மிகவும் துள்ளலலாக அமைந்துள்ளது. தமிழ் மற்றும் மலையாள பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.
பாடலில் இசையமைப்பாளர் அனிருத் ரஜினியுடன் இணைந்து ஆடியுள்ளார். மஞ்சு வாரியர் சிறப்பாக குத்து நடனம் ஆடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார்.
- ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகவுள்ளது என புது போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






