தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்

டில்லி பாபு பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.தற்பொழுது மிடிக்கிளாஸ், வளையம், யார் அழைப்பது படங்களை தயாரித்து வந்தார்.
தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனரான டில்லி பாபு பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

தயாரிப்பாளர் டில்லி பாபு மரகத நாணயம், ராட்சதன், பேச்சுலர், ஓ மை கடவுளே, கள்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்பொழுது மிடிக்கிளாஸ், வளையம், யார் அழைப்பது படங்களை தயாரித்து வந்தார்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான டில்லி பாபு உடல் நலக்குறைவால் நேற்று இரவு 12.30 மணியளவில் காலமானார். இவரின் திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவிற்கு இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com