LIK படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில்

விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
LIK படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில்
Published on

விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்து உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தை நயந்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. தற்பொழுது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர் காலத்திற்கு டைம் டிரேவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com