கவுதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மம்மூட்டியின் புதிய படத்தை பிரபல தமிழ் இயக்குநரான கவுதம் மேனன் இயக்குவுள்ளார். இப்படத்திற்கு ‘Dominic and The Ladies' Purse’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
Mammootty
Published on

மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் அண்மையில் வெளியான டர்போ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மம்முட்டியின் புதிய படத்தை பிரபல தமிழ் இயக்குநரான கவுதம் மேனன் இயக்குவுள்ளார். இப்படத்திற்கு 'Dominic and The Ladies' Purse' என்று பெயரிடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை மம்முட்டி தயாரிக்கிறார்.

முன்னதாக, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படமான துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காக காத்துக்கிடக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com