கேரவன்கள் உடைமாற்ற மட்டும் அல்ல... நடிகை ஷகிலா

நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் உடைமாற்ற கூட சரியான இடம் கிடையாது.கேரவனில் உடை மாற்றுவது மட்டுமன்றி, வேறு மோசமான விஷயங்களும் நடந்துள்ளன.
கேரவன்கள் உடைமாற்ற மட்டும் அல்ல... நடிகை ஷகிலா
Published on

மலையாள திரையுலகில் ஒரு காலத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷகிலா. இவரது படங்கள் மம்முட்டி, மோகன்லால் படங்களைவிட அதிகம் வசூல் செய்துள்ளன.

தற்போது ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, ஷகிலா தொடர்ந்து தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். மலையாள பட உலகம் போன்று தமிழ் திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன என்றார்.

மேலும் ஷகிலா கூறும்போது, "நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் உடைமாற்ற கூட சரியான இடம் கிடையாது. எந்த வசதியும் இல்லாத இடங்களுக்கு செல்லும்போது மேலே ஒரு ஆடையை போர்த்திவிட்டு உடை மாற்றுவோம்.

அப்போது எங்களை சுற்றி நிறைய ஆண்கள் நின்று கொண்டு இருப்பார்கள். அது பெரிய கொடுமையாக இருக்கும். இப்போது இருப்பது போன்று கேரவன் வசதிகள் அப்போது அதிகம் இல்லை.

கேரவனில் உடை மாற்றுவது மட்டுமன்றி, வேறு மோசமான விஷயங்களும் நடந்துள்ளன. அதை நான் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்.

மலையாள பட உலகில் ஒரு அதிகார குழு உள்ளது. அந்த குழுவில் மோகன்லால், மம்முட்டி, முகேஷ் உள்பட பலர் இருக்கிறார்கள்'' என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com