என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actress priyamani"

    • சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ தொடரின் தமிழ் ரீமேக் இதுவாகும்.
    • பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிக்க ரேவதி இயக்கியுள்ளார்.

    ரேவதி இயக்கத்தில் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'குட் வொய்ஃப்' சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.

    ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் 'குட் வைஃப்' தொடரின் டீசரை வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட 'குட் வைஃப்' என்ற தொடரின் தமிழ் வடிவம்.

    தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார்.

    இதே சீரிஸ் இந்தியிலும் 'தி டிரையல்- பியார், கணூன், தோகா' என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது.

    ஓடிடி-யில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை- இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது:-

    இந்தி ரீமேக்கில் 'குட் வொய்ஃப்' வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார். இதனை திரைக்கதையில் இருந்து படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்

    கிருஷ்ணன் குட்டி, ஹெட் ஆஃப் கிளஸ்டர், எண்டர்டெயின்மென்ட் (சவுத்) ஜியோஸ்டார், "தமிழ் ரசிகர்களுக்கு 'குட் வொய்ஃப்' சீரிஸை வெளியிட ஆர்வமாக இருக்கிறோம். இதன் இந்தி வெர்ஷனான 'தி டிரையல்- பியார், கணூன், தோகா' பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் அப்படியான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்.

    உயர்தர தொழில்நுட்பம், என்கேஜிங்கான கண்டெண்ட், ரேவதி போன்ற இயக்குநர், ப்ரியாமணி, சம்பத் ராஜ் போன்ற நடிகர்கள் மற்றும் பனிஜய் ஆசியா ஆகியோருடன் இணைந்து நல்ல படைப்பை பார்வையாளர்களுக்குக் கொடுக்க இருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது

    தீபக் தார், ஃபவுண்டர் & குரூப் சிஇஓ, பானிஜே ஆசியா& எண்டேமோல்ஷைன் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, "'குட் வொய்ஃப்' சீரிஸின் இந்தி வெர்ஷனான 'தி டிரையல்- பியார், கணூன், தோகா' பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இந்தக் கதையை தமிழிலும் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம். பானிஜே ஆசியா தென்னிந்தியாவை முக்கிய சந்தையாக கருதுகிறது. இங்கு தரமான உள்ளடக்கம் கொடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான முதல்படியாக 'குட் வைஃப்' இருக்கும். தரமான கதைகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் ஜியோஹாட்ஸ்டாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.

    • எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை.
    • பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னது இல்லை.

    ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகைகள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாலியல் தொல்லை அனுபவங்களையும் பகிர்கிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியாமணியும் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

    பிரியாமணி கூறும்போது, ''மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைத்து அறிக்கை வெளியாகி இருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்கிறார்கள்.

    மலையாளத்தில் கமிட்டி அமைத்ததுபோல தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகிலும் கமிட்டிகள் அமைத்தால் நல்லது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும். திரைத்துறை மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

    பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது. இப்போது கேமரா போன்கள் வந்துள்ளன. ஆனாலும் இப்போது வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அப்படியே தொடர வேண்டும்.

    எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை. பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னது இல்லை'' என்றார்.

    • தளபதி 69 படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
    • பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கண்களால் கைது செய்' படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் பிரியாமணி. 'பருத்தி வீரன் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரியாமணி தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

    எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை பிரியாமணி திருமணம் செய்து கொண்டது அப்போது விமர்சனத்துக்குள்ளானது.

    இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியாமணி தனது திருமணம் தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    ஒரு முஸ்லிமை திருமணம் செய்வதன் மூலம் எனக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்று சிலர் குறுஞ்செய்தி அனுப்பினர். அது என்னை மிகவும் பாதித்தது. ஜாதி அல்லது மதத்தை மீறி திருமணம் செய்துகொண்ட பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். அவர்கள் மத வேறுபாடின்றி ஒருவரையொருவர் காதலித்தார்கள். ஏன் அவர்கள் மீது இவ்வளவு வெறுப்பு காட்டப்படுகிறது என்று புரியவில்லை.

    பிரியாமணி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக எழுந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த பிரியாமணி, "நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இது என் முடிவு. நான் மதம் மாறமாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே முஸ்தபாவிடம் தெரிவித்துள்ளேன். நான் இந்து மதத்தில் பிறந்தவள். ஆகையால், எப்போதும் என் நம்பிக்கையைப் பின்பற்றுவேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை மதிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×