லவ் ஜிகாத்.. என் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்களா? - பிரியாமணி வேதனை

தளபதி 69 படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
priyamani
Published on

கண்களால் கைது செய்' படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் பிரியாமணி. 'பருத்தி வீரன் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரியாமணி தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை பிரியாமணி திருமணம் செய்து கொண்டது அப்போது விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியாமணி தனது திருமணம் தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஒரு முஸ்லிமை திருமணம் செய்வதன் மூலம் எனக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்று சிலர் குறுஞ்செய்தி அனுப்பினர். அது என்னை மிகவும் பாதித்தது. ஜாதி அல்லது மதத்தை மீறி திருமணம் செய்துகொண்ட பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். அவர்கள் மத வேறுபாடின்றி ஒருவரையொருவர் காதலித்தார்கள். ஏன் அவர்கள் மீது இவ்வளவு வெறுப்பு காட்டப்படுகிறது என்று புரியவில்லை.

பிரியாமணி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக எழுந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த பிரியாமணி, "நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இது என் முடிவு. நான் மதம் மாறமாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே முஸ்தபாவிடம் தெரிவித்துள்ளேன். நான் இந்து மதத்தில் பிறந்தவள். ஆகையால், எப்போதும் என் நம்பிக்கையைப் பின்பற்றுவேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை மதிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com