என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி..! யுவன் ட்வீட்
    X

    உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி..! யுவன் ட்வீட்

    • விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
    • கோட் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கோட் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்புகளுடன் திரையரங்களில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கும், படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தள பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அன்புக்கு மிக்க நன்றி தோழர்களே. தளபதியின் மீதான என் அன்பைக் காட்ட இந்த வாய்ப்பை வழங்கிய ஏஜிஸ் தயாரிப்பு நிறுவனம் அர்ச்சனா, ஐஸ்வர்யா, அகோரம் சாருக்கு நன்றி. கண்டிப்பாக எனக்கு பிடித்தமான அண்ணன் வெங்கட் பிரபு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×