என் மலர்
சினிமா செய்திகள்
- தொழிலதிபர் ஒருவருடன் திவ்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.
- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என திவ்யா ஸ்பந்தனா பதிவிட்டுள்ளார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அவர், திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.
அண்மையில் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கப்போவதாக அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே இவருக்குத் திருமணம் ஆகப்போகிறது என்று அடிக்கடி தகவல்கள் பரவுவது வழக்கம். அந்தவகையில் தொழிலதிபர் ஒருவருடன் திவ்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஊடகங்கள் எனக்குப் பலமுறை திருமணம் நடத்தி வைத்துவிட்டன. எத்தனை முறை என்பதை நானே மறந்துவிட்டேன். நான் திருமணம் செய்து கொண்டால், நானே உங்களிடம் தெரிவிப்பேன். தயவுசெய்து, அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- 'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக இத்திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் படமுடிப்பு முடிவடைந்துள்ளது.
'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக இத்திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயற்கைப் பேரிடராக அறிவிக்க அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் திரைப் பிரபலங்கள் நிதி வழங்கினர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கினர்.
இதே போன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார்.
வெள்ள பாதிப்பு நிதி உதவி வழங்கிய நடிகர் சிம்புவுக்கு ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் திரு சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடைசி உலகப் போர் திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது.
அடுத்ததாக `கடைசி உலகப் போர்' படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் ஆக்சன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி, "என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது.
என்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை வளர்ந்து வந்திருப்பது மகிழ்ச்சி. ஆதியை மட்டும் தான் நான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காஞ்சனா 4 கதையை எழுதி முடித்துவிட்டதாக சமீபத்தில் ராகவா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
- ரூ.100 கோடி பட்ஜட்டில் கோல்டுமைன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஹாரர் ஜானர் படங்களுக்குப் பெயர்போன ராகவா லாரன்ஸ் தனது பிரபல காஞ்சனா திரைப்பட சீரிஸில் 5 வது படத்தை இயக்க உள்ளார். அதாவது, கடந்த 2007 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மற்ற பேய் படங்களிலிருந்து மாறுபட்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில் அதைத்தொடர்ந்து முற்றிலும் காமெடி ஹாரர் ஜானரில் அவர் இயக்கிய காஞ்சனா திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகியது.
அதுவரை ஹாரர் படங்களுக்கு இருந்த டெம்ப்லேட் கதைகளை மாற்றி தனது பாணியில் காஞ்சனா படத்தை இயக்கி அதில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து 2015 இல் காஞ்சனா 2, 2019 இல் காஞ்சனா 3 என இயக்கி வெளியிட்டார். குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த படங்கள் அமைந்த நிலையில் தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளார். காஞ்சனா ஜானரை பின்பற்றி எடுக்கப்பட்ட சுந்தர் சி யின் அரண்மனை திரைப்படங்களில் சமீபத்தில் அரண்மனை 4 வரை வெளியாகியிருந்தது. இடையே பி.வாசு இயக்கத்தில் ஹாரர் ஜானரில் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா, சந்திரமுகி 2 ஆகியவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மீண்டும் இயக்குனராக மாறி எடுக்க உள்ள காஞ்சனா 4 படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காஞ்சனா 4 கதையை எழுதி முடித்துவிட்டதாக சமீபத்தில் ராகவா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படமானது ரூ.100 கோடி பட்ஜட்டில் கோல்டுமைன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தனது படத்திற்கான ஹீரோயின் தேர்வில் அதிக கவனம் செலுத்தும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 படத்தில் விஜய்யின் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்ய உள்ளாராம். அவரை படத்தின் ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முனதாக இந்த படத்தில் மிர்னால் தாக்கூர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தகக்து.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
- ப்ரோமோ வீடியோ சென்னை உள்பட தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மக்களால் வெளியிட ஏற்பாடு.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இதைதொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
7 சீசனுக்கு பிறகு, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தெரியவந்தது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான ப்ரோமா வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக ப்ரோமோ வீடியோக்கள் டிவி சேனலிலேயே வெளியிடப்பட்டு வந்த நிலையில், இம்முறை மாற்று முயற்சியாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ சென்னை உள்பட தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மக்களால் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னை பெசன் நகர், திருச்சி பிரீஸ் ஓட்டல், மதுரை அம்பிகா கலை கல்லூரி, சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, திருநெல்வேலி- பெல் ஸ்கூல், விருதுநகர் அப்சாரா சினிமாஸ், வேலூர்- பழைய பேருந்து நிலையம், கடலூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொது மக்கள் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டனர்.
- இந்த படத்திற்காக விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.
- இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு "தில் ராஜா" என்று பெயரிடப்பட்டுள்ளது. சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், கலைகுமார் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை மனோ V.நாராயணா மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் அர்ஷ் மேற்கொண்டுள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவுற்று வெயியீடிற்கு தயாராக உள்ளது. திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். நாயகன் விஜய் சத்யா படத்தில் தீவிர ரஜினி ரசிகராக நடித்துள்ளார். அவரோடு இணைந்து நாய் ஒன்றும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்துள்ளது.
பிவிஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை இம்மாதம் திரையரங்குகளில் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து வெற்றியை பெற்றது.
- இந்தாண்டு நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக விஜய் சேதுபதி உள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றது.
மேலும் இந்தாண்டு நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற அகில இந்திய செயலாளர் குமரன் என்பவரின் குழந்தைக்கு கணியன் என விஜய் சேதுபதி பெயர் சூட்டினார்.
விஜய் சேதுபதி குழந்தையைக் கொஞ்சி முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
- இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து.
- விபத்தில் காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது.
இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில், நடிகர் ஜீவா உள்பட அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும், காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில், 50 மணி நேர இடைவிடாத நேரலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைந்த இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
RJ விக்னேஷ்காந்த் மற்றும் 'சுட்டி' அரவிந்த் ஆகியோர் இணைந்து பிளாக் ஷீப் தமிழ் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வருகின்றனர்.
இந்த யூட்யூப் சேனலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில், 50 மணி நேர இடைவிடாத நேரலை நிகழ்ச்சியை RJ விக்னேஷ்காந்த் நடத்தினார். இந்த நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது.
ரஜினியின் 50 ஆண்டுக் கால திரை வாழ்க்கையை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், திரைப்படத் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைந்த இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கின்னஸ் சாதனை சான்றிதழை விக்னேஷ்காந்திடம் வழங்கினார்.
இந்நிலையில், 50 மணி நேர இடைவிடாத போட்காஸ்ட் நேரடி ஒளிபரப்பு நடத்தியதற்காக ஆர்.ஜே.விக்னேஷ்காந்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
விக்னேஷ்காந்த் மற்றும் அவரது குழுவினர் அதிகம் சிரமப்பட வேண்டாம் என்று வாய்ஸ் நோட் ஒன்றை ரஜினிகாந்த் அனுப்பியுள்ளார். அதில், அவர்களின் கடின உழைப்புக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
- என்னை மிகவும் உற்சாகப்படுத்திய படம் இது.
- படத்தின் கதையை விஜய் சேதுபதி மனைவியிடம் சொன்னேன், அவருக்கு பிடித்திருந்தது.
கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வசூலில் வாரி குவித்தது.
'96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி முடித்து விட்டதாக இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார்.

என்னை மிகவும் உற்சாகப்படுத்திய படம் இது. இந்த படத்தின் கதையை விஜய் சேதுபதி மனைவியிடம் சொன்னேன், அவருக்கு பிடித்திருந்தது. இதை அடுத்து தான் எனக்கு இந்த படத்தை உருவாக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியவர்களின் தேதிகளின் அடிப்படையில் படம் உருவாகும் என்று பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாஹீர், ரபிக் ஆகியோர் மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கி உள்ளனர்.
- அவர்கள் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
பின்னணி பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கி உள்ளனர். கால்பந்து விளையாடிவிட்டு உணவருந்த சென்ற மாணவனை பாடகர் மனோவின் மகன்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து அவர்கள் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் 2 மகன்களும் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மனோவின் மகன்களின் நண்பர்களை 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






