ரசிகர் மன்ற பொதுச்செயலாளரின் குழந்தைக்கு கனியன் என பெயர் சூட்டிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து வெற்றியை பெற்றது. இந்தாண்டு நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.
Actor Vijay Sethupathi named the child of fan as Kanyan
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக விஜய் சேதுபதி உள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றது.

மேலும் இந்தாண்டு நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற அகில இந்திய செயலாளர் குமரன் என்பவரின் குழந்தைக்கு கணியன் என விஜய் சேதுபதி பெயர் சூட்டினார்.

விஜய் சேதுபதி குழந்தையைக் கொஞ்சி முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com